பக்கம் எண் :

தராய்ப் பணிவார் சருக்கம்466

     தருக்குதல் - அகங்கரித்தெழுதல்.
 

     ஒருக்கிய - இரண்டற ஒன்றுபடுத்தப்பட்ட.
 
     உயர் நெறி - சிவநெறி.
 
     இவர்கள் சிவகணங்களேயாவர் என்பது நமிநந்தியார் புராண வரலாற்றானு
முணர்க. “அணித்தாய செழுநெறி” - வகைநூல்.
 
     தாள்வணங்க - என்பதும் பாடம்.                                 2
 
     திருவாரூர்ப் பிறந்தார்கள் புராணம் பண்பு - சிவபெருமான்
திருக்கணத்தவர்களே திருவாரூர்ப் பிறந்தார்கள். அவர்கள் திருவடிகளை வணங்குதல்
சிவநெறி அணுகப் பெறும் சாதனமாகும்.
 
     கற்பனை :- (1) திருவாரூரிலே பிறத்தற்கு முன்னைத் தவமுதிர்ச்சி வேண்டும்.
 
     (2) முன்னைத் தவமுற்றியோர் சிவகணங்கள்.
 
     (3) சிவகணங்களே திருவாரூர்ப்பிறந்தார்கள்.
 
     (4) இவர்களை வணங்குதல் சிவநெறிப் பேறுதரும்.
 

61. திருவாரூர்ப் பிறந்தார் புராணம் முற்றும்.