பக்கம் எண் :

தராய்ப் பணிவார் சருக்கம்468

     வகை :- நெறிவார்....தீண்டி - நெறித்த நீண்ட சடையினையுடைய சிவபிரான்
றிருமேனியைத் தீண்டி; முப்போதும்...அர்ச்சிப்பவர் - அழியாத சிவவாக்காகிய
ஆகமங்களிற் கூறியவழியால் மூன்று காலமும் வணங்கிப் பூசித்து வழிபாடு
செய்கின்றவர்கள்; நம்மையும்...இறையாய் - நம்மையும் ஆட்கொண்டு தேவர்களுக்கு
அதிபர்களாய்; சிவபெருமாற்கு....உலகினிலே - சிவபெருமானுக்கு உறைவிடமாகிய
சிவலோகத்தில்; முக்கண்ணும்...உறைவார் - மூன்று கண்களும் எட்டுத்தோள்களுமாகிய
சிவசாரூபம் பெற்று அழிவில்லாத சிவச் செல்வத்தோடும் இருப்பவர்கள்.
 

     நெறி - நெறித்தல்; சிறு வளைவுகளுடன் செறிவுடைத்தாதல்; நீடு ஆகமம் -
சிவவாக்காய் அநாதியாய் அழியாதுள்ள சிவாகமங்கள்; ஆகமத்தினறிவு -
ஆகமஞானத்தினால் அவ்விதிப்படி; அர்ச்சித்தல் - வழிபாட்டு முறை யெல்லாம்
குறித்தது. நம்மையும் ஆண்டு - “அடியேன்” என்ற முதனூற் பொருள் கூறியபடி;
முக்கண் - எண்டோள் -இவை சிவசாரூபக் குறிகள்; இவர்கள் செய்யும் பணி, சைவ
நாற்பாதங்களுள் வைத்துக் கிரியா யோகங்களாதலானும், அவற்றின் பயன் சாமீப
சாரூபங்கள் பெறுதலாம் எனப்படுதலானும், சிவன் உலகினிலே - முக்கண்ணும்
எண்டோளும் தரித்து உறைவார்
என்றார். சிவவழிபாட்டில் அந்தரியாகம்
பிராணாயாமம் பாவனை முதலிய அங்கங்கள் சிவராஜயோகம் எனப்படுவன. ஈறில்
செல்வம்
- ஏனைய பதங்கள்போல அழிவுறாது என்றும் இருக்கும் சிவச்செல்வம்;
முத்தித்திரு. உறைவு - இருப்பிடம்.
 
     விரி:- 4160. (இ-ள்) எப்போதும்.....அதிகரித்து - எக்காலத்தும் ஆன்மாக்களுக்கு
இனியவராகிய சிவபெருமானது இனிய திருவருளினாலே பெருகி;
மெய்ப்போத.....வழுவாமே - உண்மையான சிவாகமஞான நெறிப்படி வந்த விதியின்
முறைமைகள் தவறாமல்; அப்போதைக்கப்போதும்....அர்ச்சிப்பார் - அவ்வக்காலந்
தோறும் ஆசைமிகும் அன்புடையவர்களாகி முக்காலத்தினும் அருச்சிப்பவர்கள்; முதற்
சைவராம் முதல்வர் - ஆதி சைவர்களாகிய முனிவர்கள்.
 
     (வி-ரை) எப்போதும் இனியபிரான் - உயிர்களிடத்தில் நீங்காது
எக்காலத்திலும் இனியனவே செய்யும் இறைவர்; சிவபிரான். எப்போதும் - மறந்த
காலத்தும், அறியாக்காலத்தும், இகழ்ந்தகாலத்தும் என்றின்னன எல்லாம் கொள்க.
     இனிய - இனிமையே செய்யும்; இனிமை - உண்ணின்று நீங்காதுடனிருந்து
நன்மை தீமை யறிவுறுத்திக் கண்டுகாட்டி உய்விக்கும் அருள்; “நானேது மறியாமே
யென்னுள் வந்து நல்லனவுந் தீயனவுங் காட்டா நின்றாய்”, “எப்போது மினியானை
யென்மனத்தே வைத்தேனே”, “என்னி லாரு மெனக்கினி யாரிலை, என்னிலும்மினி
யானொரு வன்னுளன்” (தேவா). உயிர்களை உய்விக்கும் தொழிலை இடையறாது
செய்தருள்பவராதலின் எப்போது மினியபிரான் என்றார்; மலத்திற் கேவலத்திற்
கட்டுண்டு கிடந்த உயிர்களைக் கருணைக்கையால் எடுத்து, உடல் கருவி
கரணங்களையும் உலகபோகங்களையும் தந்து உயிர்க்குயிராய் உண்ணின்று, உண்மைப்
பொருளை அவ்வவற்றின் பக்குவப்படி உணர்த்திச், செலுத்தி, மலபரிபாகம்
விளைவித்துத் திருவடிப்பேறாகிய முத்திநெறியிற் செலுத்துதல்ஈண்டுக் கூறப்பட்டது.
 
     பிரான் இன் அருளால் அதிகரித்து - பிரமதேவன் முகத்திற் றோன்றிய
மகாசைவர்களாகிய ஏனைய வேதியர் போலல்லாது இவர்கள் முதற்படைப்பிலே
சிவபெருமானது ஈசானம் தற்புருடம் அகோரம் வாமதேவம் சத்தியோசாதம் என்ற
ஐம்முகங்களின் வழியே சிவசிருட்டியாக உதித்த அகத்தியர், கௌதமர், பாரத்துவாசர்,