பக்கம் எண் :

பெரியபுராணம்469

காசிபர், கௌசிகர் என்ற ஐந்து இருடியரின் கோத்திரங்களின் வழியே விருத்தியாகி
வழிவழி வருபவர்கள் என்பது; இவ்விருடியர் சிவபெருமான்பால் உபதேசம்
பெற்றவர்கள்; இவர்கள் வழிவழி சிவபிரானுக்கே அகம்படித் தொண்டிபுரிபவர்கள்.
“மாதொரு பாக னார்க்கு வழிவழி யடிமை செய்யும் வேதியர் குலம்” (149) என்றதும்,
ஆண்டுரைத்தவையும் பார்க்க.
 

     மெய்ப்போதநெறி வந்தவிதி - உண்மைஞானமாகிய சிவாகம நெறி; இது சத்தி
நிபாதர்க்குணர்த்தும் சிறப்புநூல் விதி. வேதம் உலகர்க்குணர்த்தும் பொதுநூல் விதியாம்.
மெய்ப்போதம் - சிவாகமம்; நெறி - சரியையாதி நானெறி.
 
     விதிமுறைமையாவது - விதித்த, மந்திரம் - பாவனை - கிரியை என்ற
மூன்றானும் வழிபாடு செய்யும் முறை.
 
     ஆர்வம் மிகும் அன்பு - அன்பினை அடிப்படையாகக் கொண்டு முற்றிய
ஆசை.
 
     முதற்சைவராம் - சிவன் அநாதி சைவன்; சிவனிடமாக வந்து முதற்றீக்கை
பெற்று வழிவழி வருதலின் முதற்சைவர் - ஆதிசைவர் எனப்படுவர்; முனிவர் -
மனனசீலர்; புகழ்த்துணை நாயனார் புராணம் பார்க்க.
 
     முப்போதும் - காலை - நண்பகல் - மாலை - என்ற மூன்றுகாலங்கள்.
“முப்போதும்” (வகைநூல்) திரிகால சந்தி என்பது வடமொழி; இந்நிலை இறப்பு, நிகழ்வு,
எதிர்வு என்ற மூன்றினும் ஆகும் படியினை மேல்வரும்பாட்டிற் காண்க. எப்போதும் -முப்போதும் - முற்றும்மைகள். “சந்தி மூன்றினுந் தாபர நிறுத்தி” (நம்பி - தேவா).  1
   
4161. தெரிந்துணரின் முப்போதுஞ் செல்கால நிகழ்காலம்
வருங்கால மானவற்றின் வழிவழியே திருத்தொண்டின்
விரும்பியவர்ச் சனைகள்சிவ வேதியர்க்கே யுரியன;வப்
பெருந்தகையார் குலப்பெருமை யாம்புகழும் பெற்றியதோ?                 2
 
     (இ-ள்) தெரிந்து உணரின் - ஆராய்ந்து உணர்ந்தால்; முப்போதும் - முன்கூறிய
மூன்று காலங்களிலும்; செல்காலம்.....ஆனவற்றின் - இறப்பு - நிகழ்வு - எதிர்வு என்று
மூன்றாகப் பகுக்கப்படும் எக்காலத்திலும்; வழிவழியே......உரியன - வழிவழியாகச்
சிவனது அகம்படித் திருத்தொண்டில் விரும்பிய வழிபாட்டர்ச்சனைகள்
சிவமறையோர்களுக்கே உரியனவாம்; அப்பெருந்தகையார்....பெற்றியதோ? - அந்தப்
பெருந்தகையாளர்களின் குலத்தின் பெருமை எம்மாற் புகழப்படும் தன்மையுள்
அடங்குமோ? (அடங்காது).
 
     (வி-ரை) தெரிதல் - ஆராய்தல்; முப்போது - முன் பாட்டிற் கூறிய
வழிபாட்டுக் காலங்கள்.
 
     செல்காலம்...ஆன - செல்காலம் - சென்றகாலம் - இறந்தகாலம்; இவை
காலப்பாகுபாடுகள். முன் கூறியவை நாட்கூறுபாடுகளும் வழிபாட்டுக் குரிய
நேரங்களுமாம். செல்கால முதலிய மூன்றினும் என முற்றும்மை விரிக்க.
 
     ஆனவற்றின் - உரியன - முன்காலத்திலும் உரித்தாயிருந்தன; இப்போதும்
உரியன; இனியும் உரியனவாவன.
 
     வழிவழியே - பரம்பரையாக; முன் பாட்டின் உரை பார்க்க.
 
     வழிவழியே - சிவ வேதியர்க்கே உரியன - ஏகாரங்களுள் முன்னையது
தேற்றம். பின்னையது பிரிநிலை; ஏனையமறையோர் முதலிய எவர்க்கும் உரியனவல்ல
என்பதாம்; இக்கூறிய அர்ச்சனைகள் சிவாலயங்களிற் செய்யும் பரார்த்தபூசை; ஏனைய
பிரமவேதியர்களாகிய சிவதீக்கை பெற்ற மகாசைவர் முதலியோர் ஆன்