பக்கம் எண் :

தராய்ப் பணிவார் சருக்கம்470

மார்த்த பூசைக்கு மட்டும் உரியோர். அவர்கள் பரார்த்த பூசையினை ஆசையினாலும்,
அதிகாரத்தானும், பிறவாற்றானும் இந்நாளிற் சில இடங்களிற் காண்பது போலக்,
கவர்ந்து செய்யப்புகின் நாட்டுக்கும் அரசுக்கும் கேடுபயக்கும் என்பது சிவாகமங்கள்
முதலிய ஞானநூல்களின் விதி; சிவன் கோயில்கள் எல்லாம் சிவாகம விதியின் படியே
அமைத்துத் தாபிக்கப்பட்டவை யாதலின் அவற்றின் வழிபாட்டர்ச்சனை முறைகளும்
அவ்வாகமங்களின்படியே நிகழத்தக்கவை என்பதே நீதி.
 

     அர்ச்சனைகள் - நித்தம், நைமித்திகம், காமியம் என்ற மூன்றும்
இவற்றினங்களாகிய மூன்றும் ஆக ஆறுவகையுமாம். அர்ச்சனை - வழிபாட்டு
விதிகளாகிப் பூசை ஒழுங்குகள் யாவும் என்ற பொருளில் வந்தது.
 
     சிவ வேதியர்க்கே உரியன - பிரிநிலை ஏகாரத்தால் ஏனையோர்க்கில்லை
என்பது பெற்றாம். “பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றனை யர்ச்சித்தாற், போர்கொண்ட
வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம், பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாமென்றே,
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே” (திருமந்), “சிவன் முகத்திலே செனித்த விப்பிர
சைவர், இவரே யருச்சனைக்கென் றெண்”, “அயன்முகத்திற் றோன்றிய வந்தணரர்ச்
சித்துப் பயனடைதற் கிட்டலிங்கம் பாங்கு”, “பாங்கில்லை தீண்டப் பாரார்த்தமிவர்
தீண்டிற், றீங்குலகுக் காமென்று தேறு” (சைவசமய நெறி); சிவவேதியர் ஆன்மார்த்தம்
பரார்த்தம் என்ற இரண்டற்கு முரியவர்கள்.
 
     இவ்வாறு உண்மையாகவும், குலம் என்பதேயில்லை; எதுவும் எவரும் செய்யலாம்;
பிறப்பால் செயலுரிமைப் பேதமில்லை; என்றிவ்வாறு கூவிப் புரட்சி புரியும் மாக்கள்
இத்தத்துவங்களை உய்த்துணர்ந்து, உண்மை நெறியில் ஒழுகியும் உலகினரை ஒழுகச்
செய்தும் உய்வார்களாக.
 
     பெற்றியதோ - ஓகாரம் வினா; எதிர்மறையின்கண் வந்தது. பெற்றியதன்று என்க.
 
     இப்பாட்டுப் பல பிரதிகளில் இல்லை.
 
     வழிவழிசெய் - என்பதும் பாடம்.                                    2
 

வேறு
 

4162.    நாரணற்கு நான்முகற்கு மறிய வொண்ணா
    நாதனையெம் பெருமானை ஞான மான
ஆரணத்தி னுட்பொருள்க ளனைத்து மாகும்
    அண்ணலையெண் ணியகால மூன்று மன்பின்
காரணத்தா லர்ச்சிக்கு மறையோர் தங்கள்
    கமலமலர்க் கழல்வணங்கிக் கசிந்து சிந்தைப்
பூரணத்தான் முழுநீறு பூசிவாழும்
    புனிதர்செய லறிந்தவா புகல லுற்றேன்.                            3
 
     (இ-ள்) நாரணற்கும்....நாதனை - விட்டுணுவுக்கும் பிரமனுக்கு அறிய
வொண்ணாத இறைவரை; எம்பெருமானை - எமது பெருமானாரை;
ஆரணத்தின்...அண்ணலை - ஞானமயமான வேதங்களினுட்கிடையான
பொருள்களெல்லாம் ஆகின்ற பெருமையுடைய பிரானை; எண்ணிய....வணங்கி -
விதிக்கப்பட்ட மூன்று சந்தியாகாலங்களிலும் அன்புகாரணமாக அருச்சிக்கும்
சிவமறையோர்களுடைய தாமரை போன்ற கழல்களை வணங்கி, அத்துணைகொண்டு;
கசிந்து.....புகலலுற்றேன் -