பக்கம் எண் :

பெரியபுராணம்471

மனங்கசிந்த நிறைவுடைமையாலே முழுதும்நீறு பூசிவாழும் தூயவர்களது செயலினை
அறிந்தவாறு சொல்லப்புகுகின்றேன்.                                   3
 

     (வி-ரை) இப்பாட்டும் பல பிரதிகளில் இல்லை;
 
     நாதனை - பெருமானை - அண்ணலை - என மூன்றுவகையாற் கூறியது
சரியை கிரியை யோகம் என்ற மூன்று நெறிகளின் வழிபாட்டுரிமை உணர்த்தற்கு.
 
     அறியவொண்ணா - நெறியல்லா கெறியாற் றேடினாராதலின் இருவருங்
கண்டிலர் என்றார் பேராசிரியர்.
 
     ஞானமான ஆரணம் - வேதங்களின் ஞானகாண்டமானவும் வேதசிரசு என்னும்
உபநிடதங்களும் ஆம்; சிவவேதியர்கள் வேதம் ஆகமம் என்ற இரண்டற்கும்
உரிமையுடையவர்.
 
     உட்பொருள்கள் - உட்குறிப்பாய் இதயத்துட் கொண்டு வைத்துவிளங்கும் சிறந்த
உண்மைகள்.
 
     எண்ணிய - எண்ணப்பட்ட; விதித்த.
 
     சிந்தை கசிந்துள்ள அப்பூரணத்தினாலே என்க; பூரணம்; நிறைவு -
நிறைவாவது வேறொன்றற்கும் இடங்கொடாது முழுமையும் வியாபித்தல்.
 
     முழுநீறு பூசி - முழுமையும் நீறு அணிந்து. “முழுவதுமெய் யணிவ ரன்றே”
(4168.) அறிந்த ஆ - அறிந்த ஆறு - தொகுத்தல் விகாரம்;
 
     புனிதர் - முனிவர்.                                           4
 
     முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம் - பண்பு - எப்போதும்
இனியராகிய சிவன் முகத்தில் தோன்றி, அவரருளாலே விருத்தியாகிச், சிவாகம
நெறிவழுவாமல், ஆர்வமிகும் அன்புடன் முப்போதும் சிவனை அருச்சிக்கும்
ஆதிசைவர்களாகிய முனிவர்கள் முப்போதும் திருமேனி தீண்டுவார்கள்
எனப்பெறுவார்கள்.
 
     கற்பனை :- (1) சிவன் எல்லாவுயிர்க்கும் எப்போதும் இனியவர்.
 
     (2) சிவவேதியர்கள் சிவ சிருட்டியாகச் சிவனைம் முகங்களினின்றும் தோன்றி
விருத்தியாயினவர்கள்.
     (3) சிவ ரார்த்த பூசை சிவாகம விதிப்படி அம்முறையிற் செய்யத்தக்கன.
 
     (4) சிவார்ச்சனை மூன்றுகாலமுஞ் செய்யத்தக்கது.
 
     (5) எல்லாக்காலத்திலும் சிவார்ச்சனைகள் சிவவேதியர்க்கே உரியன;
ஏனையோர்க்குப் பரார்த்த பூசை உரியதன்று.
 
     (6) சிவவேதியர்கள் வேதாகம மிரண்டற்கும், ஆன்மார்த்த பரார்த்த பூசைகள்
இரண்டற்கும் உரியவர்கள்.
 
     (7) வேதங்களின் ஞானகாண்டத்தின் உட்பொருளாகிய சிவனது பூசையும்
சிவவேதியர்களுக்கேரியது வாகும்.
 

62. முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம் முற்றும்.