பக்கம் எண் :

தராய்ப் பணிவார் சருக்கம்472


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

63. முழுநீறு பூசிய முனிவர் புராணம்.
_ _ _ _ _
 

தொகை
 

“முழுநீறு பூசிய முனிவர்க்கு மடியேன்”

- திருத்தொண்டத் தொகை - (10)
 

வகை
 

உலகங் கலங்கினு மூழி திரியினு முள்ளொருகால்
விலகுத லில்லா விதியது பெற்றநல் வித்தகர்தாம்

அலகில் பெருங்குணத் தாரூ ரமர்ந்த வரனடிக்கீழ்
இலகுவெண் ணீறுதம் மேனிக் கணியு மிறைவர்களே.

- திருத்தொண்டர் திருவந்தாதி - (75)
 

விரி
 

திருநீற்றின் வகை
 
4163.     தார மாயனைத்து மாகி நின்ற
    வங்கணனெம் பெருமானீ ரணிந்த வேணிக்
காதார்வெண் திருக்குழையா னருளிச் செய்த
    கற்பமநு கற்பமுப கற்பந் தானும்
ஆகாதென் றங்குரைத்த வகற்ப நீக்கி
    யாமென்று முன்மொழிந்த மூன்று பேத
மோகாதி குற்றங்க ளறுக்கு நீற்றை
    மொழிகுதுநம் மிருவினைகள் கழிவ தாக.                 1
 
     புராணம் :- இனி, நிறுத்திமுறையானே, பதினொன்றாவது பத்தராய்ப்பணிவார்
சருக்கத்துள் ஆறாவது முழுநீறு பூசிய முனிவர் பண்பு கூறும் பகுதி
 
     தொகை :- பொழிப்பு உரைத்துக் கொள்க.
 
     முழுநீறுபூசிய - முழுமையும் நீறுபூசிய; “அருமுனிவர் முழுவதுமெய்
யணிவரன்றே” என்று விரிநூல் இதனை விரித்தபடி காண்க. (4168); முனிவர் - மனன
சீலர்.
வகை :- அலகில்...இறைவர்களே - அளவுபடாத பெரியஎண்குணங்களையுடைய
திருவாரூர்ப் பெருமான் திருவடிக்கீழே விளங்கும் திருவெண்ணீற்றினைத் தமது
மேனியில் அணியும் எமது தலைவர்களே; உலகம்...வித்தகர் - உலகங்கள் எல்லாம்
கலங்கினாலும், ஊழிக்காலம் மாறுபட்டாலும் ஒருகாலத்தும் உள்ளம் தாம் கலங்காத
நிலைபெற்ற வித்தகர்களாவார்.