பக்கம் எண் :

தராய்ப் பணிவார் சருக்கம்476

     செல்வம் - பெருஞ் செல்வம் ஆகிய முத்தித்திருவை விளைக்கும்.
 

     மாணிக்கக்கூத்தர் - மாணிக்கம் போன்ற கூத்து இயற்றுபவர்; இரத்தின சபாபதி என்பர்.
 
     மொழி - சிவாகமம்; ஆகுபெயர்.                               3
 
உபகற்ப நீறு
 
4166. அடவிபடு மங்கியினால் வெந்த நீறும்
     ஆனிலைக ளனறொடக்க வெந்த நீறும்
இடவகைக ளெரிகொளுவ வெந்த நீறும்
     இட்டிகைகள் சுட்டவெரி பட்ட நீறும்
உடனன்றி வெவ்வேறே யாவி னீரா
     லுரைதிகழு மந்திரங்கொண் டுண்டை யாக்கி
மடமதனிற் பொலிந்திருந்த சிவாங்கி தன்னால்
     வெந்ததுமற் றுபகற்ப மரபி னாகும்.                        4
 
     (இ-ள்) அடவி....நீறும் - பசுக்கள் மேயும் காடுகள் மரங்களின் உராய்தலினால்
உண்டாகிய தீயினாலே வெந்த நீறும், பசுக்கள் தங்கும் இடங்கள் தீப்பற்றிக்கொள்ள
வெந்த நீறும், இவ்வாறுள்ள பல இடங்கள் தீப்பற்ற வெந்த நீறும், செங்கற்களைச் சுட்ட
தீயின் உண்டாகிய நீறும் ஆகிய இவற்றை; உடனன்றி....உண்டையாக்கி -
ஒன்றுசேர்க்காமல் தனித்தனியே சிவாகமங்களில் விதித்த உரிய மந்திரங்களாலே பசு
மூத்திரத்தினாலே பிசைந்து உண்டையாகச் செய்து; மடமதனில்...மரபினாகும் -
திருமடங்களில் விளங்கும் சிவாக்கினியினால் விதித்தப்படி நீற்றப்பட்டது உபகற்ப
மென்று சொல்லப்படும்.
 
     (வி-ரை) படும்அங்கி - மூங்கி முதலியவற்றால் தோன்றும் தீ.
 
     வெந்தநீறு - வேகுதலால் உண்டாகும் நீறு.
 
     ஆனிலைகள் - பசுக்கள் இருக்கு மிடங்கள்; இவை பசுவின் சாணம் நிறைந்து
கிடக்குமிடம்.
 
     இட்டிகைகள் - செங்கற்கள். இட்டிகா - இட்டிகை; வடசொற்றிரிவு.
 
     மடம் - முனிவர், மறையோர், பெரியோர்கள் வாழும் இடங்கள்; சிவாங்கி -
இவர்கள் நாளும் வளர்க்கும் நியமமாகிய சிவவேள்வித் தீ.               4
 
நீறுஅணியும்பரிசு
 
4167. இந்தவகை யாலமைத்த நீறு கொண்டே
     இருதிறமுஞ் சுத்திவரத் தெறித்த பின்னர்,
அந்தமிலா வரனங்கி யாறு மெய்ம்மை
     யறிவித்த குருநன்மை யல்லாப் பூமி
முந்தவெதி ரணியாதே யணியும் போது
     முழுவதுமெய்ப் புண்டரஞ்சந் திரனிற் பாதி
நந்தியெரி தீபநிகழ் வட்ட மாக
     நாதரடி யாரணிவர் நன்மை யாலே.                        5
 
     (இ-ள்) இந்த.....கொண்டே - முன்கூறிய இவ்வாறு அமைத்து விளைத்து எடுத்த
திருநீற்றினைக் கொண்டு; இரு......பின்னர் - அகம் புறம் என்னும் இரண்டிடத்தும்
சுத்திவரும்படி பாவித்து ஒரு சிறிது நிருதி மூலையிலே (தென்மேற்கில்) உரிய மந்திரத்