பக்கம் எண் :

பெரியபுராணம்477

தால் தெறித்த பின்பு; அந்தமிலா....அணியாதே - அழிவில்லாத சிவன் சந்நிதியும், தீயும்,
ஆறும், உண்மை நெறியினை உபதேசித்த குருவும், வழி நடையும், நன்மை சாராத
பூமியும் என்றிவ் விடங்களின் முன் அணியாது; அணியும் போது - விதிப்படி
அணிகின்ற காலத்தில்; முழுவது மெய்.....வட்டமாக - உடல் முழுதும் பூசுதல்,
திரிபுண்டரம், பிறைவடிவம், ஓங்கி யெரிகின்ற விளக்குச் சுடராகிய முக்கோணம்,
விளங்குகின்ற வட்டம் ஆகிய இவ்வடிவிலே; நாதனடியார்.....நன்மையாலே -
சிவனடியார்கள் நன்மையினால் அணிகுவர்.
 

     (வி-ரை) முதற் பாட்டினால், திருநீற்றின் வகைகளைக் கூறி, அதன் மேல்மூன்று
பாட்டுக்களினால் மூவகைத் திருநீற்றினையும் பெறும் வகையும் பண்பும் கூறி,
இப்பாட்டினால் நீறு அணியத்தக்க இடமும் அணியும் வகையும் கூறுகின்றார்.
 
     அமைத்த - விளைவித்தெடுக்கப்பட்ட; இருதிறம் - அகமும் புறமும்; தெறித்து
- சிறிதளவு எடுத்து அசுர பீடையணுகாதபடி அத்திர மந்திரத்தினால் விரலினால்
தெறித்து.
 
     அரன் - அங்கி - ஆறு - குரு - நன்மையல்லாப்பூமி - இவ்விடங்களின்
எதிரில் திருநீறணியலாகாது என்பது விதி; ஆறு - நடந்து செல்லும் வழியிடை;
நன்மையல்லாப் பூமி - தூய்மையில்லாத நிலம்.
 
     மெய் முழுவதும் - இது (தூளிதம்) பொடியாக உடல் முழுதும் பூசுதல் குறித்தது.
 
     புண்டரம் - திரிபுண்டரம் - மூன்று கீற்றுக்கள்; சந்திரனிற்பாதி - பிறை வடிவம்.
     நந்தி எரிதீபம் - நந்துதல் இங்கு ஒளிவிட்டு - சுவாலித்து - எரியும் தன்மை
குறித்தது; தீபம் - விளக்குச் சுடர் - மேல் நோக்கிய முக்கோண வடிவம். வட்டமாக
அணிதல்
- சிறுத்தொண்ட நாயனாருக்கு அருள் புரியவந்த வயிரவர்
திருநீற்றுப்பொட்டு அணிந்த திருக்கோலம் காண்க. "இளம்பிறை தன்னைப், பெருகு சிறு
மதியாக்கி...சாத்தியதென்னத் திருநுதன்மேற் றிருநீற்றுத் தனிப்பொட்டுத் திகழ்ந்திலங்க"
(3687)
 
     நன்மை - நலம்தரும் விதி.                                        5
 
முழுநீறு பூசிய முனிவர்
 
4168. சாதியினிற் றலையான தரும சீலர்
தத்துவத்தி னெறியுணர்ந்தோர் தங்கள் கொள்கை
நீதியினிற் பிழையாது நெறியி னிற்போர்
நித்தநிய மத்துநிக ழங்கி தன்னிற்
பூதியினைப் புதியபா சனத்துக் கொண்டு
புலியதளி னுடையானைப் போற்றி நீற்றை
ஆதிவரு மும்மலமு மறுத்த வாய்மை
யருமுனிவர் முழுவதுமெய் யணிவ ரன்றே.                            6
 
     (இ-ள்) சாதியினில்....சீலர் - சாதி யொழுக்கத்தில் தலைமையான தரும
சீலத்தையுடையவர்களும்; தத்துவத்தின் நெறியுணர்ந்தோர் - தத்துவ நெறியினை
உணர்ந்தவர்களும்; தங்கள்...நிற்போர் - தமது கொள்கை நீதியின் வரும்
நெறியினின்றும் சிறிதும் தவறாது நிற்பவர்களும் ஆகி; ஆதி.....முனிவர் - தொன்று
தொட்டு வரும் மும்மலங்கையும் அறுத்த வாய்மையுடைய அரு முனிவர்கள்;
நித்த...பூதியினை - நியமம்தவறாது செய்யும் நித்தியாக்கியினில் விளைத்தெடுத்த
திருநீற்றினை; புதிய பாச