பக்கம் எண் :

தராய்ப் பணிவார் சருக்கம்480

     வருக்கம் - வரிசை; அடைத்தல் - அடைவுபடக் கூறுதல்; பெருக்கு
அம்மதுரத் தொகை
- என்க; அகரம் பண்டறிசுட்டு; மதுரத்தொகை -
திருத்தொண்டத் தொகை; பெருக்குதலாவது அளவுபடாத தொகை யடியார்களை
எடுத்துக் கூறுதல்; தொகையடியார்களின் முடிபு காட்டுமிடமாதல் குறிப்பு; பண்பு கூறிப்
பெருகச் செய்தல்; கழற்கே ஒருக்கு மனத்தொடு - சார்ந்தவர் என்று கூட்டுக;
கழற்கே - உருபு மயக்கம்; தொகை என்று - தெரிக்கும் என இயைக்க; பெய் -
கட்டிய; அணிந்த; கழல் - கழலையணிந்த திருவடிக்கு வந்தது; பெருக்கும் -
என்றதனால் அப்பாலும் - என்றதற்கு இடத்தால் அப்பால் என்றும், காலத்தால்
அப்பால் - முன்னும் பின்னும் - என்றும் இதனைப் பெருக உரைத்தது விரிநூல்;
இவ்வாறன்றி ஒருக்கு மனத்தொடு என்றதனை நாவலூர் மன்னவனுடன் கூட்டி
உரைத்தனர் முன் உரைகாரர்; ஒருக்கு மனத்தொடு சார்ந்தவர் - என்க;
சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகுதல்; அப்பாலுமடிச்சார்ந்தார்கள் எனப்படுவோர்
தவமுதிர்ச்சியினாற் சிவகணத்தோரேயாவர் என்பது. மதுரம் - இனிமை; இன்பம்;
பேரின்பம்.
 

     விரி :- 4169. (இ-ள்) மூவேந்தர்.......முறைமையோரும் - மூவேந்தர்களது தமிழ்
வழங்கும் நாடுகளுக்கு அப்பால் சிவபெருமானாரது அடியினைச் சார்ந்த
முறைமையினர்களும்; நாவேய்ந்த......பின்னும் - நம்பிகளது தெய்விக நாவின்கட்
பொருந்திய திருத்தொண்டத் தொகையிலே துதிக்கப்பட்ட திருத்தொண்டர்களாகிய
தனியடியார்களின் காலத்துக்கு முன்னும் அதன் பின்னும்; பூவேய்ந்த...அடிச்சார்ந்தாரும்
- பூக்கள் பொருந்திய நீண்ட சடையின் மேலே அடம்பு மலரும் தும்பை மலரும்
கங்கையும் கொன்றையும் பொருந்தும்படி சூடிய, இடபத்தைப் பொறித்த வெற்றி
பொருந்திய கொடியினையுடைய சிவனது திருவடியிற் சார்ந்தார்களும்; செப்பிய...தாமே -
சொல்லப்பட்ட அப்பாலு மடிச்சார்ந்தார் எனப் பெற்றவர்கள் தாமே யாவர்.
 
     (வி-ரை) மூவேந்தர் தமிழ்வழங்கு நாடு - என்றது, தமிழ் வழங்காத நாடுகளும்
மூவேந்தர் கீழ் நின்றன வாதலின் அவற்றுள் தமிழ் வழங்கு நாட்டை வேறு பிரித்து
ஓதினார். பிறிதினியைபு நீக்கிய விசேடணம்.
 
     தமிழ்வழங்கு நாட்டினை வேறு தணியாகக் கூறினமை திருத்தொண்டத்
தொகையுள் போற்றப்பட்ட அடியார்கள் பெரும்பான்மையும் தமிழ் வழங்கு நாட்டினுட்
சேர்ந்தவர்களாதலின் என்க; தமிழ் வழங்கும் நாடல்லாத பிறமொழி வழங்கும் 17
நாடுகளிலும் சிவனடிச் சார்ந்த தொண்டர்களுண்டு என்பதாம்; இவர்கள் இடத்தால்
அப்பாலும் அடிச்சார்ந்தார். இவை சிங்கள முதலாகக் கூறப்படும்.
 
     திருத்தொண்டத் தொகை.......முன்னும் பின்னும் என்பது காலத்தால்
அப்பாலும் அடிச்சார்ந்தார்களைக் குறித்தது. காலத்தாலும் பெரும்பான்மை பற்றி
அடியார்கள் திருத்தொண்டத் தொகையுட் டனித்தனி எடுத்துக் கூறப்பட்டார்கள். முன்
- இறந்த காலத்தினையும், பின் - என்பது எதிர்காலத்தினையும் உணர்த்த நிறுத்தித்
திருத்தொண்டத் தொகையுட் போற்றப்பட்ட அடியார்களின் காலத் தொகுதியை
நிகழ்காலமாக வைத்து, முக்காலத்தும் என விரித்த நிலை கண்டு கொள்க.
 
     அப்பாலும் - இடத்தாலும் காலத்தாலும் அப்பால்என்று விரிநூலுள் உரை
விரித்தனர் ஆசிரியர். சைவத்தின் பரந்த முற்றிய நிலையினை நாட்டிக்
காட்டியருளுவது இத்திருப்பாட்டு.
 
     அடிச்சார்ந்தார் - திருவெண்காட்டடிகள் முதலாயினோர். இப் பாட்டால்
சைவத்தின் சமரசம் நன்கு விளங்குதல் காண்க என்றும், சைவத்தைத் தமிழ்