பக்கம் எண் :

தராய்ப் பணிவார் சருக்கம்482


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

சுந்தரமூர்த்தி நாயனார் துதி
_ _ _ _ _
 

தொகை
 

“ஆரூர னாரூரி லம்மானுக் காளே”

- திருத்தொண்டத் தொகை - (10)
 

வகை
 

செழுநீர் வயன்முது குன்றினிற் செந்தமிழ் பாடிவெய்ய
மழுநீள் தடக்கைய னீந்தபொன் னாங்குக்கொள் ளாதுவந்தப்
பொழினீ டருதிரு வாரூரில் வாசியும் பொன்னுங்கொண்டோன்
கெழுநீள் புகழ்த்திரு வாரூர னென்றுநாங் கேட்பதுவே.

- திருத்தொண்டர் திருவந்தாதி - (77)
 

விரி
 

4170. செற்றார்தம் புரமெரித்த சிலையார் செல்வத்
    திருமுருகன் பூண்டியினிற் செல்லும் போதிற்
சுற்றாருஞ் சிலைவேடர் கவர்ந்து கொண்ட
    தொகுநிதியின் பரப்பெல்லாஞ் சுமந்து கொண்டு
முற்றாத முலையுமையாள் பாகன் பூத
    முதற்கணமே யுடன்செல்ல முடியாப் பேறு
பெற்றார்தங் கழல்பரவ வடியேன் முன்னைப்
    பிறவியினிற் செய்ததவம் பெரிய வாமே.                        2
 
     தொகை :- பொழிப்பு உரைத்துக்கொள்க.
 
     வகை :- செழுநீர் ....பாடி - செழிப்புடைய வயல்கள் சூழ்ந்த திருமுது குன்றில்
செந்தமிழ்ப்பதிகம் பாடி (அதற்குப் பரிசிலாக); வெய்ய.....பொன் - விரும்பத்தக்க
மழுவினை யேந்திய பெரிய கையினையுடைய இறைவர் ஈந்த பொன்னினை; ஆங்குக்
கொள்ளாது வந்து - அங்குப் பெற்றுக்கொள்ளாமல் போந்து;
அப்பொழில்நீள்.......கொண்டோன் - பொழில்கள் சூழ்ந்த திருவாரூரிலே மாற்று
நிறைவையும் அப் பொன்னினையும் பெற்றவர்; கெழுநீள்.....கேட்பதுவே - செழிப்புடைய
நீண்ட புகழ்களையுடைய நம்பியாரூரர் என்பது நாம் பெரியோர் சொல்லக்
கேட்டறிகின்ற உண்மை.
 
     இது நம்பிகள் திருமுதுகுன்றத்தில் இறைவரைப் பாடிப் பெற்ற பன்னிரண்டாயிரம்
பொன்னையும் பெருமானை வேண்டி அங்குத் திருமணிமுத்தாற்றினிலிட்டுத்