பக்கம் எண் :

பெரியபுராணம்487

     (வி-ரை)    மூதுர் - திருநின்றவூராம் என்று கூட்டுக.
 

     ஒழுக்கம் - நல்லொழுக்கம்; “தொண்டை, நன்னாடு சான்றோ ருடைத்து” என்பது
பழமொழி. “தீய வென்பன கனவிலு நினைவிலாச் சிந்தைத், தூய மாந்தர் வார்
தொண்டை நாடு” (1124) என்று ஆசிரியர் இந்நன்மைகளை யெல்லாம் தொகுத்துக்
கூறியது இங்கு நினைவு கூர்தற்பாலது. தொண்டை நாட்டினைப்பற்றி இப்புராணத்துள்
முடிந்த நிலையிற் கூறும் இடம் இதுவாகலின் இவ்வாறு இங்குத் தொகுத்துக் கூறினார்.
 

     தொண்டை நாட்டு - மூதூர் என்க. நான்மறை விளங்கும் - இப்புராண
முடைய நாயனாரது மரபுபற்றி இத்தன்மையினை விதந்து கூறினார்.
 
     குலமுதற்சீலம் என்பது “பார்ப்பான் பிறப்பொழுக்கம்” (குறள்).
 
     கொள்கை நிலவிய செல்வம் - கொள்கை என்பது உயிரின் மேம்பாடு பற்றிய
குறிக்கோள்; நிலவுதல் - அக்குறிக்கோளிற் பிறழாத முயற்சியுடைமை; இந்நாயனாரது
வரலாற்றின் வைத்துக்காண்க.
 
     நிலவிய செல்வம் மல்கி நிகழ் - என்றது திருநின்ற என்ற ஊர்ப்பெயரின்
காரணப்பொருள் பற்றி விளக்கியவாறு; “திருவாமூர்” (1277) முதலியவை போலக்
காண்க; இது தின்னனூர் என வழங்குகின்றது (இரயில்பாதை நிலையம்).
 
     என்னும் - விளக்கு - என்பனவும் பாடங்கள்.                       2
 
4173. அருமறை மரபு வாழ வப்பதி வந்து சிந்தை
தருமுணர் வான வெல்லாந் தம்பிரான் கழன்மேற் சார
வருநெறி மாறா வன்பு வளர்ந்தெழ வளர்ந்து வாய்மைப்
பொருள்பெறு வேத நீதிக் கலையுணர் பொலிவின் மிக்கார்.             3
 
     (இ-ள்) அருமறை....வந்து - அரிய வைதிக மரபு வாழும்படி அப்பதியிலே
அவதரித்து; சிந்தை.....சார - சித்தத்திலே வரும் உணர்வுகள் எல்லாம் சிவபெருமான்
றிருவடியிலே சாரும்படி; வருநெறி.....வளர்ந்து - வரும் வழியினின்றும் பிறழாத அன்பு
வளர்ந்தோங்கத் தாமும் வளர்ந்து; வாய்மை..........மிக்கார் - உண்மைப் பொருளைப்
பெறுதற்கேதுவாகிய வேதநீதிக் கலைகளை உணர்கின்ற விளக்கத்தின் மிகுந்தனர்.
 
     (வி-ரை) மறை மரபு - வேதியர் குலம்;   வந்து - அவதரித்து.
 
     அன்பு வளர்ந்தெழ வளர்ந்து - பிறந்த போதே சிவன்பா லன்புடன் தோன்றி
அதனோடு மேன்மேல் வளர்ந்து; பூசல் - அன்பு; பூசலார் - காரணப்பெயர்.
 
     வாய்மைப்பொருள் - மெய்ப்பொருள்; பெறுதல் - பெறுவித்தல்.
 
     கலையுணர் பொலிவு - உணர்தலான் மிக்க விளக்கம். இது கலைகளை
உணர்ச்சியிற் கொண்டொழுகுதலால் வரும் ஞான விளக்கம்.
 
     உணர்வான எல்லாம் - என்றதனாற் சொல்லும் செயலும் உடன்
கொள்ளப்படும்.                                                   3
 
4174. “அடுப்பது சிவன்பா லன்பர்க் காம்பணி செய்த” லென்றே
கொடுப்பதெவ் வகையுந் தேடி யவர்கொளக் கொடுத்துக் கங்கை
மடுப்பொதி வேணி யையர் மகிழ்ந்துறை வதற்கோர் கோயில்
எடுப்பது மனத்துட் கொண்டர் ரிருநிதி யின்மை யெண்ணார்.         4
 
     (இ-ள்) அடுப்பது.......என்றே - சிவனுக்கும் அவனன்பர்க்கும் தமக்கு ஆகும்
பணிகளைச் செய்தலே தக்கதாம் என்றே துணிந்து; கொடுப்பது.......கொடுத்து - கொடுப்ப