தற்காக எவ்வகையாலும் பொருளைத் தேடி அவ்வடியவர்கள் கொள்ளும்படி கொடுத்து; இருநிதியின்மை எண்ணார் - கோயில் அமைப்பதற்குப் பெருந்திரளான. செல்வம் தம்மிடம் இல்லாமையை எண்ணாதவராய்; கங்கை....மனத்துக் கொண்டார் - கங்கை வெள்ளம் நிரம்பிய சடையினையுடைய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளி யிருப்பதற்கு ஒரு கோயிலைக் கட்டும் செயலை மனத்துட் கருதினார். |
(வி-ரை) அடுப்பது - செய்யத்தக்கது; பணி - பணிகளின் தொகுதி. |
சிவன்பாலன்பர்க்கு - சிவன்பாலும் அன்பர்க்கும் என்க. இவ்வாறன்றி சிவனிடத்தன்பு பூண்ட அடியவர்க்கு என்று ஒன்றாகக் கூட்டியுரைப்பினுமமையும். |
அடுப்பது - இதுவே மக்கட் பிறப்புக்கு அடுப்பது; ஏனைய வெல்லாம் அடாதன. 1832 - 2985 - பார்க்க. |
என்றே - என்றே துணிந்து; |
கொடுப்பது - அடியார்க்குக் கொடுக்கும் பொருளை; எவ்வகையும் - தம்மாலியன்ற எவ்வகையானும். அவர் - அன்பர். |
கங்கை மடு - கங்கை வெள்ளம்; மடு - ஆழமாகிய பெரிய நீர்நிலை; பொதிதல் - நிறைதல். |
கோயில் எடுப்பது - எடுத்தல் - அமைத்தல்; கட்டுதல்; எடுப்பதனை என்று இரண்டனுருபு விரிக்க. |
இருநிதி - கோயில் அமைத்தற்கு வேண்டும் பெரும் செல்வம் 4179 - பார்க்க. இன்மை - தம்பால் இல்லாமையினை; இரண்டனுருபு விரிக்க. |
எண்ணார் - எண்ணாதவராகி; முற்றெச்சம். எண்ணார் - மனத்துட்கொண்டார் - என்று கூட்டுக. கோயில் எடுக்கும் திருப்பணிக்கு இருநிதி முதலில் வேண்டப்படுவது என்ற உண்மையை ஆர்வ மிகுதியினால் நினையாது. 4 |
4175. | மனத்தினாற் கருதி யெங்கு மாநிதி வருந்தித் தேடி எனைத்துமோர் பொருட்பே றின்றி “யென்செய்கே” னென்று நைவார் நினைப்பினா லெடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதிய மெல்லாந் தினைத்துணை முதலாத் தேடிச் சிந்தையாற் றிரட்டிக் கொண்டார். 5 |
(இ-ள்) மனத்தினால்......தேடி - பொருள் தேடிப்பெறும் இடங்களை மனத்தினால் கருதி எங்கும் பெருநிதியினை வருந்தித் தேடியும்; எனைத்தும்.....நைவார் - எவ்வாறாயினும் ஒரு சிறிதும் பொருளைப் பெறும் நிலை கிட்டாமல் “இனி என் செய்வேன்” என்று வருந்துவாராகி; நினைப்பினால் எடுக்க நேர்ந்து - நினைவினாலே கோயில்எடுப்பதனைத் துணிந்துகொண்டு; நிகழ்வுறும்...திரட்டிக் கொண்டார் - செயல் நிகழ்வதற்குற்ற நிதியங்களைக் எல்லாம் தினை அளவுள்ள சிறிது சிறிது அளவாகத் தேடி மனத்தினாற் சேர்த்துக் கொண்டனர். |
(வி-ரை) மனத்தினாற் கருதி - பொருள் பெறும் இடங்களையும் வகைகளையும் மனத்திற்றேர்ந்துகொண்டு; தேடி - தேடியும்; எனைத்தும் - எவ்வாற்றானும்; ஓர் - ஒரு சிறிதும்; பொருட்பேறு - பொருள் பெறும் நிலை. நைவார் - நைதல் - மனம் மிக வருந்துதல். நேர்ந்து - துணிவு பூண்டு. தினைத்துணை - தினையின் அளவு; முதலான - சிறிது சிறு அளவாக. “தினைத்துணை யுள்ளளோர் பூவினிற்றேன்” (திருவா). “தினைத்த னைப்பொழுது தும்மறந் துய்வனோ ” (அரசு); தினை (பனை) என்பன சிறுமை பெருமைகட்கு எடுத்துக் காட்டும் அளவு (பரிமே); நாயனாரின் முயற்சியின் பெரிய அளவு காட்டத் “தினைத்துணை முதலா” என்றார். |