பக்கம் எண் :

பெரியபுராணம்491

     கொன்றிய செயலை நாளை யொழிந்துபின் கொள்வா” யென்று
கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில்கொண் டருளப் போந்தார்
 
     4178. (இ-ள்) தூபியும்.....செய்து - தூபியினையும் நாட்டிச், சுண்ணச்சாந்து பூசி,
மேல் சிற்ப அலங்கார வகைகளையும் செய்து; கூவலும் அமைத்து - தீர்த்தக்கிணறும்
அமைத்து; மாடு......போக்கி - பக்கத்திலும் கோயிற் சுற்றிலும் மதில்களைக் கட்டி;
வாவியும் தொட்டு - தடாகமும் அகழ்ந்து அமைத்து; மற்றும் வேண்டுவ வகுத்து -
மேலும் வேண்டுவனவற்றையும் வகைபடச் செய்து; மன்னும்.....நாளில் - நிலை பெற்ற
தாவரத்தைச் சிவபெருமானுக்குப் பொருந்தும்படி நிறுத்திய நாள் அணுகும் போது;   8
                                   
     4179. (இ-ள்) காடவர் கோமான்.......எடுத்து - காடவர் பெருமானாகிய பல்லவ
அரசன் கச்சியம்பதியிலே கற்கோயில் எடுப்பித்து; முற்ற.....செய்வான் - முழுதும்
பக்கமெல்லாம் சிவனுக்காகப் பெருஞ் செல்வங்களை நியமிக்கின்றவன்;
நாட......முன்னாள் - திருமாலும் தேடியறிதற்கரியராகிய இறைவரைத் தாபித்தற்கு
நியமித்த அற்றை நாளைக்கு முன்னாளிலே; ஏடலர்....எய்தி - இதழ்கள் விரிகின்ற
கொன்றை மலர்களைச் சூடிய இறைவர் இரவினில் அவனது கனவில் தோன்றி;      9
 
     4180. (இ-ள்) நின்றவூர்.....புகுவோம் - திருநின்றவூரில் உள்ள பூசல் என்கின்ற
அன்பன் நீண்ட நாட்களாக நினைந்து நினைந்து செய்த நன்மையால் நீடும் கோயிலிலே
நாளை நாம் புகுவோம்; நீ ...கொள்வாய் - (ஆதலால்) நீ இங்கு இக் கோயிலிற்
பொருந்திய செய்கையை நாளைக்கழித்து வைத்துக்கொள்வாயாக என்று அருளிச்
செய்து; கொன்றை.....போந்தார் - கொன்றை சூடிய நீண்ட சடையினையுடைய இறைவர்
தொண்டரது கோயிலின் தாவரத்தைக் கொண்டருள எழுந்தருளினர்.
 
     இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
 
     4178. (வி-ரை) தூபி - விமானத்துச்சியில் அமைக்கும் கூரிய சிகரம்; நடுதல் -
அதனை நிறுத்துதற்காகத் தறி நடுதல்.
 
     சுதை - நல்வினை - விமானம், கோபுரம் முதலியவற்றிற் சுண்ணச் சாந்து
வேலை. நல்வினை - உரிய விதிப்படி அட்டகயம், நாகம், இடபம் முதலிய உருவங்கள்
தீட்டுதல்.
 
     கூவல் - கோயிலினுள் இறைவர் தீருமஞ்சனத் தீர்த்தத்துக்குரிய கிணறு; வாவி -
கோயிற் புறத்து அடியார்க்குப் பயன்படும் தடாகம் - திருக்குளம்.
 
     கோயில் மாடு - கோயில் சூழ்மதில் - என்க. கோயில் மாடு என்பது
உட்சுற்று மதில்; கோயில் சூழ்மதில் - புறச்சுற்று; போக்குதல் - நேர்பட அமைத்தல்;
 
     தொட்டு - அகழ்ந்து அமைத்து; தொடுதல் - தோண்டுதல்.
 
     மற்றும் வேண்டுவ - சுற்றாலயங்கள், திருநந்தவனம், ஏனைய மண்டபங்கள்
முதலியவை.
 
     மன்னும் தாவரம் - சிவனை அவரது திருமேனியாகிய திரு உருவத்தில்
(சிவலிங்கத்தில்) நிலைபெறச் செய்யும் சிவாகமச் சடங்கு; பிரிதிட்டை; “தாபர லிங்கம்”
(திருமந்); “சந்தி மூன்றினுந் தாபர நிறுத்தி” (தேவா). சிவனுக்கேற்ப - ஏனைய
பரிவாரத் தெய்வங்களுக்கு வெவ்வேறு நாள்களும் சிவனுக்கு வேறு நாளுமாகக்
கொண்டு செய்தல் குறித்தது.
 
     விதித்த - குறித்த; கும்பாபிடேகத்துக்குக் கொண்ட.