பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்492

     சாரும் நாளில் - அதனைச் சார்ந்த முன்னாளில்.
     நாளில் - எய்தி - என்று - போந்தார் - என மேல்வரும் பாட்டுக்களுடன்
கூட்டி முடிக்க.
 
     இப்பாட்டாற் கோயில் அமைப்புக்கு வேண்டிய அங்கங்கள் எல்லாம்
கூறப்பட்டன.
 
     தாவரம் - தாபனம் (பிரதிட்டை) - என்பனவும் பாடங்கள்.         8
 
     4179. (வி-ரை) காடவர்.....எடுத்து - இந்தக் காடவர் - பல்லவ அரசராகிய
இராச சிங்கர் என்றும், இந்தக் கற்றளி - கச்சியிற் சிறந்த கைலாயநாதர் கோயில்
என்றும், இது சீகயிலாயத் திருக்கோயில் போன்ற அமைப்புக்களுடன் நிறுவப்பட்ட
தென்றும் சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். கோமான் - கருத்தர்.
 
     தாபிக்கும் அந்நாள் - கும்பாபிடேகம் செய்து பிரதிட்டை செய்தல் என்பர்.
சிவாகம விதிப்படி மந்திரம் பாவனை கிரியைகளால் சிவனை அங்கு
மந்திரத்திருமேனியினின்றும் இலிங்கத் திருமேனியில் நிறுத்தல்; அந்நாள் - குறித்த
நாள்.
 
     அந்நாள் முன்னாள் - அந்நாளின் முந்திய நாளிலே; உருபு விரிக்க.
 
     மாடெலாம்.....பெருஞ்செல்வம் - பக்கங்களில் எல்லாம் விளைநிலம் முதலிய
செல்வங்கள்.
 
     மாடு - பக்கம்; செல்வங்கள் - பொருள். தமது பொருள்கள் எல்லாம்
சிவனுக்காகும்படி என்றலுமாம்.
 
     செய்வான் - செய்வானாகி; செய்வான் - தாபிக்கும் - என்று கூட்டுக.
 
     நாட....தாபிக்கும் - திருமாலுக்கும் தேட அறியாராயினும் அன்பர் விருப்பின்
படி அங்குச் சிவலிங்கத் திருமேனியில் வெளிப்பட வீற்றிருக்கச் செய்யும் என்பது
குறிப்பு. மோனை நயம்பற்றி ஆடமால் என்று கொண்டு அகந்தையால் அடிகாண்பன்
என்று உரையாடியமையால் என்றும், அரவின் மீதாடியமால் என்றும் கூறுவாரு முண்டு.
 
     ஏடு - இதழ்; வேய்தல்: சூடுதல்.
 
     கனவில் - அக்காடவர் கோமானது கனவில்.                       9
 
     4180. (வி-ரை) நெடிது நாள் நினைந்து - “நெடிது நாள் கூட” (4177); மனத்
திருப்பணி முற்றச் செய்த நிலை காட்டியபடி. நினைந்து - நினைவினாலே.
 
     நன்று நீடு - நன்மை நீடிய; புறக்கோயில்கள்போலக் காலாந்தரத்தில் அழிவுறாது
என்றும் நீடும் நன்மையுடையது அக்கோயில் என்பது.
 
     புகுவோம் - இலிங்கத் திருமேனியில் விளங்க எழுந்தருளுவோம்; வெளிப்படும்
இடமாகக் கொள்வோம்.
 
     இங்கு ஒன்றிய செயல் - இங்கு அத்தன்மை பொருந்த எண்ணிய செயல்;
செயலைப் - பின் - கொள்வாய் - என்க. நாளை ஒழிந்து - நாளையதினத்தை
நீக்கிப் பின்னர். கொள்வாய் - நிகழ்த்துவாயாக; செயல் - தாபனம்.
 
     தொண்டர் கோயில் - பூசலாரது மனக்கோயில்.
 
     கொண்டருளுதல் - இருப்பிடமாகக் கொண்டு விளங்க வீற்றிருந்தருளுதல்.
 
     போந்தார் - மறைந்தருளினர். இவ்வருளிப்பாடு அரசருக்கு பூசலாரது
திருத்தொண்டின் உயர்வினையும், பூசலாரது பெருமையினையும் அறிவித்தருளி, அதன்
மூலம் உலகறியச் செய்து உய்விக்கும் திருவுள்ளக் கருணைபற்றி எழுந்தது;
கழறிற்றறிவாருக்கு நம்பிகளை நினைப்பிக்கும் வகையாற் செய்த (3791 - 44)
அருளிப்பாட்டினை இங்கு நினைவு கூர்க; இங்கு இரண்டு கோயில்களிலும் ஒருங்கே
விளங்கும்