பின்பு பூசனைகள் எல்லாம் - தாபித்ததன் பின்னர்ச் செய்யத்தக்க மண்டலாபிடேக பூசை, நித்திய பூசை முதலாயின; எல்லாம் - என்றதனால் நைமித்திக பூசையும் விழாவும் கொள்ளப்படும். |
பேணி - விரும்பிச் செய்து; பெருமையிற் பேணுதலாவது இறைவர் மகிழ்ந்தருளப் பெற்ற பெருமையினால் மேலும் மிக விரும்புதல். |
பொன்புனை மன்று - பொன்னம்பலம். |
பொற்கழல் நீழல் புக்கார் - திருவடி நிறைவுக்குள் அடங்கி நிற்றல் இங்குப் புகுதல் எனப்பட்டது. 17 |
4188. | நீண்டசெஞ் சடையி னார்க்கு நினைப்பினாற் கோயி லாக்கிப் பூண்டவன் பிடைய றாத பூசலார் பொற்றாள் போற்றி ஆண்டகை வளவர் கோமா னுலகுய்ய வளித்த செல்வப் பாண்டிமா தேவி யார்தம் பாதங்கள் பரவ லுற்றேன். |
(இ-ள்) நீண்ட.....போற்றி - மிக நீண்ட சிவந்த சடையினையுடைய இறைவருக்கு நினைப்பினாலேயே கோயில் அமைத்து மேற்கொண்ட அன்பு இடையறாது செய்த பூசலாருடைய பொன்னடிகளைத் துதித்து; (அத்துணையாலே) ஆண்டகை....பரவலுற்றேன் - ஆண்மை மிக்க சோழர் பெருமான் உலக முய்யத் திருவுயிர்த்த செல்வப் பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசி யம்மையாரது திருவடிகளைத் துதிக்கப் புகுகின்றேன். |
(வி-ரை) நீண்ட செஞ்சடையினார் - “எறிநீர்க் கங்கை தோய்ந்த நீள் சடையார்” (831) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க; புறத்தே நீண்ட தன்றியும் இங்கு நாயனாரது அகத்திலும் நீண்டு கோயில் கொண்ட நிலைக்குறிப்பு. |
நினைப்பினால் கோயில் - மனக்கோயில்; அன்பிடையறாத - முன்னும் பின்னும் நீங்காத அன்பின் தொடர்ச்சியுடைய. (4187). |
ஆண்டகைமையாவது “சிலம்பணிசே வடியார்தம், மன்னியசை வத்துறையின் வழிவந்து” எக்காலத்தும் பிறழாது சிவநெறி நிற்கும் வீரம். |
உலகுய்ய அளித்த - மங்கையர்க்கரசியார் வரலாற்றின் விரிவு காண்க. (ஆளுடைய பிள்ளையார் புராணம்); பரசமய நிராகரணம் சைவத்தாபனமும் ஆகிய உய்தியினை உலகம் பெறவைத்த. |
வளவர் கோமானளித்த - பாண்டிமாதேவியார் - “வளவர்கோன் பாவை.....பாண்டிமாதேவி” (தேவா); இவரது வரலாற்றுக் குறிப்பு. |
பரவல் - துதித்தல்; மேல்வரும் இவரது புராணம் துதி உருவமாயே யமைந்திருத்தல் காண்க. 18 |
ஆசிரியர் தமது மரபுப்படி, இதுவரை கூறிய சரித சாரங்கூறி முடித்துக் காட்டி, மேல் வரும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்தநிலை கண்டுகொள்க. |
சரிதச்சுருக்கம்: பூசலார் நாயனார் புராணம் :- நல் ஒழுக்கம் என்றும் உயர்ந்த தொண்டை நன்னாட்டில் மறையவர் செல்வமிக்கவூர் திருன்றவூர் என்பதாம். இவ்வூரில் வேதியர் மரபில் அவதரித்தவர் சிவனன்பில் சிறந்து மறைவிளங்கிய ஒழுக்க முடையராகிய பூசலார். அவர் அன்பர்க்காம் பணிசெய்தலே மக்கட்பிறப்புக்கு அடுத்த செயல் என்று எவ்வகையாலும் பொருள் தேடி அடியவர்க்குக் கொடுத்து வந்தார். அதன்மேல் அரன்பணி செய்ய எண்ணித், தமக்கு நிதியின்மையையும் |