புரியும். நிகழ்காலத்தாற் கூறியது ஆசிரியரது காலத்தில் சேரநாடு சேரமன்னர்களால் ஆளப்பட்டுவந்தமை குறித்தது; குலமூதூர் - குலம் - மேம்பாடு; கோமூதூர் - அரசரது தலைநகர். |
| இப்பாட்டினால் நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, பழஞ்சரிதம், குடிவளம் முதலிய பலவும் கூறிய திறம் கண்டு கொள்ளற்பாலது. நாட்டுவளம் முதலியவை முன்னர் விறன்மிண்ட நாயனார் புராணத்துள் விரித்தமையால் ஈண்டுச் சுருக்கிக் கூறினார். |
பல்புகழின் - சொல்புலவர் - என்பனவும் பாடங்கள். 1 |
| 3749. | காலை யெழும்பல் கலையினொலி களிற்றுக் கன்று வடிக்குமொலி சோலை யெழுமென் சுரும்பினொலி துரகச் செருக்காற் சுலவுமொலி பாலை விபஞ்சி பயிலுமொலி பாட லாடன் முழவினொலி வேலை யொலியை விழுங்கியெழ விளங்கி யோங்கும் வியப்பினதால். 2 |
| |
(இ-ள்) காலை...கலையினொலி - காலையிலே பயிலப்படும் வேதம் முதலிய கலைகளின் ஒலியும்; களிற்று....வடிக்குமொலி - யானைக் கன்றுகளின் பிளிற்றின் ஒலியும்; சோலை....சுரும்பினொலி - சோலைகளினின்றும் எழுகின்ற மெல்லிய வண்டுகள் பண் பாடும் ஒலியும்; துரக...சுலவுமொலி குதிரைகளின் செருக்கினாலே கனைத்துச் சுழலும் ஒலியும்; பாலை...ஒலி - பாலை விபஞ்சியாழ் பயிலும் ஒலியும்; பாடல்...ஒலி - பாடல்கள் ஆடல்களுக்கிசைய முழக்கப்படும் முழவின் ஒலியும்; வேலை...வியப்பினதால் - (அங்கு மிகும்) கடலின் ஒலியினையும் கீழ்ப்படுத்தி மேல் எழுந்து விளக்கம் பொருந்தி மேலோங்கும் வியப்பை யுடையது (அப்பதிதான்.) |
(வி-ரை) அப்பதி - வியப்பினது - என்று எழுவாய் முன் பாட்டினின்றும் வருவிக்க. |
காலை எழும் பல்கலையின் ஒலி - கலைகளின் பயிற்சிக்கு உரிய காலம் அதிகாலை என்பவாதலின் காலை எழும் என்றார்; பல்கலை - வேதமும் கலைஞானங்களும். “கலை ஒலியால் துயிலெழுவ தன்றிக் கோழியின் எழாது எம்ஊர்” (பரிபா.) |
வடிக்குமொலி - வடிக்கும் - திருந்திய - சிறந்த; வசமாக்கப் பழகும் என்பாரு முண்டு; யானைகள் புறநகரில் உள்ளனவாதலால் அவற்றின் கன்றுகள் நகரில் இருத்தல் கூறினார். |
துரகச் செருக்காற் சுலவும் ஒலி - துரகம் - குதிரை; செருக்கு - மிக்க களிப்பு; மிகுந்த வலிமையும், அவ்வன்மையினைச் செலுத்துதற்கு இடம் பெறாமை கருதிக் கனைத்தலும் மேம்பாடும் குறித்தது. சுலவுதல் - இக்குதிரைப் பந்தியின் ஓர் குதிரையினையே பின்னர் இந்நாயனார் மேல்கொண்டு கயிலையினை அடைந்த சரிதக் குறிப்பும் காண்க. |
பாலை விபஞ்சி - பாலை விபஞ்சி யாழ் முதலிய வகைகள்; பாலை ஏழுவகையாய் 103 பேதங்களுடையது; இவற்றின் விரிவு இசை நூல்களுட் காண்க. விபஞ்சி என்பது யாழ் - வீணை - பண் என்ற பொதுப் பொருளில் வந்தது; பாலை - யாழினைக்கூறியது கடலினின்றும் கொள்ளப்பட்டுத் திருந்திய நிலனும் குறிஞ்சியும் முல்லையும் மயங்க நிற்கும் முறைமை பற்றிப் போலும் என்பதும் கருதப்படும். இது பற்றி விறன்மிண்ட நாயனார் புராணத்துள் (491- 492) உரைத்தவை பார்க்க; இனி விபஞ்சி - குறிஞ்சி யாழ்த்திறத் தொன்றெனக் கொண்டு (பிங்கலம்) பாலை யாழும் குறிஞ்சித் திணைக்கேற்ற குறிஞ்சி யாழும் என எண்ணும்மை விரித்துரைத்தலுமாம். |