பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்500


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

66. மங்கையர்க்கரசியம்மையார் புராணம்
_ _ _ _ _
 

தொகை
 

“மன்னியசீர் மறைநாவ னின்றவூர்ப் பூசல்
    வரிவளையாண் மானிக்கு (நேசனுக்கு) மடியேன்”

- திருத்தொண்டத் தொகை - (11)
 

வகை
 

பூச லயிற்றென் னார்க்கன லாகப் பொறாமையினால்
வாச மலர்க்குழற் பாண்டிமா தேவியா மானிகண்டீர்
தேசம் விளங்கத் தமிழா கரர்க்கறி வித்தவரால்
நாசம் விளைத்தா ளருகந் தருக்குத்தென் னாட்டகத்தே.

- திருத்தொண்டர் திருவந்தர்தி - (79)
 

விரி
 

4189. மங்கையர்க்குத் தனியரசி, யெங்க டெய்வம்,
    வளவர்திருக் குலக்கொழுந்து, வளைக்கை மானி,
செங்கமலத் திருமடந்தை, கன்னி நாடாள்
    தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை,
எங்கள்பிரான் சண்பையர்கோ னருளி னாலே
    யிருந்தமிழ்நா டுற்றவிடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் டிருநீறு பரப்பி னாரைப்
    போற்றுவார் கழலெம்மாற் போற்ற லாமே.                       1
 
     புராணம் :- இனி, நிறுத்த முறையானே, பன்னிரண்டாவது மன்னியசீர்ச்
சருக்கத்துள், இரண்டாவது மங்கையர்க்கரசியம்மையார் புராணங் கூறத் தொடங்குகின்றார். மங்கையர்க்கரசியம்மையாரது வரலாறும் பண்பும் கூறும் பகுதி.
 
     தொகை :- பொழிப்பு உரைத்துக் கொள்க. வரிவளையாள் மானி -
வரிகளையுடைய வளையல்களை அணிந்த மானியார் என்னும்
மங்கையர்க்கரசியம்மையார். மானி - பெருமையுடையவர்; “வரிவளைக் கைமட மானி”
(பிள் - தேவாரம்).
 
     வகை :- பூசல்...பொறாமையினால் - பகைவரைப் போரில் வெல்லும் கூரிய வேல்
ஏந்திய பாண்டியருக்கு அனல் காரணமாக வெப்பு நோய் வந்தமையால்
பொறுக்கலாற்றாதவாரகி; தேசம்.......அறிவித்து - உலகமெல்லாம் சைவ நெறியின்