பீடையினை நீக்கித் திருநீற்றினைப் பரவச் செய்தவர்; ஆளுடைய பிள்ளையாரது புனித வாக்கினாலே பாடல்பெறும் பெருந்தவத்தினையுடையார். |
நெடுமாறனாருக்குச் சைவ வழித்துணையாய் நெடுங்காலம்வாழ்ந்து குற்றமறுக்கும் நெறியாகிய சிவநெறியில் நின்று அவரோடும்கூட சிவன்றிருவடிக்கீழ் அமர்ந்தனர். |
கற்பனை :- (1) தாம் புகுந்த மரபுக்கு வரும் பழியை நீக்கி நன்னெறிப்படுத்துதல் கற்புடைய மங்கையர் கடமை. |
(2) தமது குடும்பத்தைப் போலவே தமது நாட்டுக்கு வரும் இடர்நீக்கி நன்னெறியிற் செலுத்துதல் கற்புடைய மங்கையர்செய்கையாம். |
(3) திருநீற்று நெறியின் விளங்குதல் நாட்டுக்கு நன்மையேயாகும். |
(4) ஞானாசாரியரை அடுத்து நாடு நலம்பெறுதற்பொருட்டு அவரருளைத் தேடுதல் பெருங்கற்புடைய மங்கையர் செயலாம். |
(5) பெரியோராற் பாராட்டப் பெறும் பேறு முன்னைப் பெருந்தவத்தாலன்றி இசையாது. |
(6) தமது நாயகரது உயிர்க்குறுதியாகிய நெறிதேடி யடைவித்தல் கற்பரசிகளின் செயல். |
(7) தம் நாயகருக்கு உடற்றுணையாவது மட்டுமன்றிச் சைவவழித் துணையுமாகி நின்று அவருடனே இறைவரது திருவடியடைதல் கற்புடைய சிறந்த மங்கையர் தன்மை. |
தலவிசேடம்; மதுரை - முன் உரைக்கப்பட்டது. III பக். 1310. |
66. மங்கையர்க்கரசியம்மையார் புராணம் முற்றும் |