உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
67. நேசநாயனார் புராணம் _ _ _ _ _ |
தொகை |
| “மன்னியசீர் மறைநாவ னின்றவூர்ப் பூசல் வரிவளையாண் மானிக்கு நேசனுக்கு மடியேன் | |
- திருத்தொண்டத் தொகை - (11) |
வகை |
| “நாட்டமிட் டன்றரி வந்திப்ப வெல்படை நல்கினர்தந் தாட்டரிக் கப்பெற் றவனென்பர் சைவத் தவரரையிற் கூட்டு மகப்படக் கோவண நெய்து கொடுத்துநன்மை யீட்டுமக் காம்பீலிச் சாலிய நேசனை யிம்மையிலே | |
- திருத்தொண்டர் திருவந்தாதி - (80) |
விரி |
4192. | சீர்வளர் சிறப்பின்மிக்க செயன்முறை யொழுக்கங் குன்றா நார்வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும் பார்வளர் புகழின் மிக்க பழம்பதி மதிதோய் நெற்றிக் கார்வளர் சிகர மாடக் காம்பீலி என்ப தாகும். 1 |
புராணம் :- இனி, நிறுத்த முறையானே, பன்னிரண்டவது மன்னியசீர்ச் சருக்கத்தினுள் மூன்றாவது நேசநாயனார் புராணம் கூறத் தொடங்குகின்றார்; நேச நாயனாரது வரலாறும் பண்பும் கூறும்பகுதி. |
தொகை :- பொழிப்பு உரைத்துக் கொள்க. |
நேசனுக்கும் - உம்மை - எண்ணும்மை; நேசன் - காரண இடுகுறிப் பெயர்; சிவனையும் சிவனடியாரையும் போற்றும் தேசு (ஞான விளக்கம் ) நேசம் எனப்பட்டது என்பது ஆசிரியர் திருவாக்கு (4192); “தாள்தரிக்கப் பெற்றவன்” (வகை) |
வகை :- நாட்டமிட்டு.....நல்கினர்தம் - கண்ணைத் தோண்டி இட்டு அருச்சித்து முன்னாள் திருமால் வழிபட வெற்றிதரும் சக்கரப்படையினை அளித்த இறைவரது; தாள்......என்பர் - திருவடியைத் தாங்கப்பெற்றவர் என்று எடுத்துக் கூறுவர்; சைவத்தவர் அரையில்........கொடுத்து - சிவனடியார்களுடைய அரையில் கட்டும் உடையும் கீளொடு கோவணமும் தாமே நெய்து கொடுத்து; நன்மை...இம்மை |