யிலே - இம்மையிலே நன்மையினைப் பெருகப்பெற்ற காம்பீலி நகரத்தில் சாலியர் மரபில் உதித்த நேசநாயனாரை. |
நாட்டம் - கண்; நாட்டத்திற்குரிய கருவியாகிய கண்ணை நாட்டம் என்றார்; ஆகுபெயர்; இனி, நாடு பகுதியாகக் கொண்டு, நாட்டமிட்டு - மனத்தெளிவு பூண்டு வந்திப்ப என்றுரைத்தலுமாம். வெல்படை - சக்கரம்; திருவீழிமிழலையில் மால், கண்மலர் கொண்டு அருச்சித்துச் சக்கரம் பெற்ற சரிதக் குறிப்பு; “நீற்றினை நினைய பூசி” என்பது முதலிய தேவாரத் திருவாக்குக்களிலும் இவ்வரலாறு போற்றப்பட்டது; தாள்தரிக்கப் பெறுதலாவது எப்போதும் திருவடியை மனத்துள் வைத்து நினைந்திருத்தல்; அரையிற்கூட்டும் - இடுப்பில் சேர்த்துக் கட்டும் உடை; அகப்படக் கோவணம் - அகப்படமும்கீளும் கோவணமும்; அகப்படம் - உள் உடை; “உடையுங் கீளும் கோவணமும்” (4194 - 4195). |
சைவத்தவர் - சிவனடியார்; காம்பீலி - நகரம். தலவிசேடம் பார்க்க; சாலியர் - குலமரபு; இம்மையிலே - ஈட்டும் என்க, தேசனை - என்பர் என்று இயைக்க. கூட்டுமக்கப்படம் - என்பதும் பாடம். கப்படம் - உடை; - (க. உடம்பு). |
தொகை நூல் பெயர் கூறிற்று; ஊரும் மரபும் தொண்டும் வரலாறும் பண்பும் வகைநூல் வகுத்தது. |
விரி ;- 4192. (இ-ள்) சீர்வளர்....குன்றா - சீர்களை வளர்க்கும் தன்மை யுடைய சிறப்பின் மிக்க செயல்களின் முறைமையில் நல் ஒழுக்கம் குறையாத; நார் வளர்...நன்மையார் - அன்புமிக்க சிந்தையும் வாய்மையும் நன்மையும் மிக்கவர்கள்; மன்னிவாழும்.....பழம்பதி - நிலைபெற்று வாழ்தற்கிடமாகிய உலகில் ஓங்கிய புகழால் மிகுந்த பழம்பதியாவது; மதிதோய்......என்பதாகும் - சந்திரன் தவழ்கின்ற முகட்டினையும் மேகங்கள் தோயும் சிகரங்களையும் உடைய மாடங்கள் நிறைந்த காம்பீலி என்ற ஊராகும். |
(வி-ரை) சீர்வளர் - சீர் - சீர்த்தி; பெருமை. சீர்.......ஒழுக்கம் - உலகியல் பற்றிய ஒழுக்கங்களின் மிக்கனவாகிய உயிரினியல் பற்றிய ஒழுக்கம் என்பது குறிப்பு. |
வளர் - செயல் என்று கூட்டுக. வளர்க்கும் தன்மையுடைய சிறந்த செயல்கள். |
சீர்வளர் - நன்மையார் - அப்பதியில் வாழும் குடிகளின் மேன்மைத் தன்மை யால் பதியின் சிறப்புக் கூறியவாறு. |
சிந்தை - வாய்மை - நன்மையார் - மனம் வாக்குக் காயம் என்ற மூன்றானும் நலமிக்கவர்கள். நன்மை - செயன் முறை ஒழுக்கம். நார் -அன்பு. நன்மையார் - பெரியோர்கள். |
நெற்றி - முகடு; சிகரம் - சிறு தூபிகள். |
மதிதோய் - கார்வளர் - என்பன மாடங்களின் உயர்ச்சி குறித்தன. |
காம்பீலி - பல்லாரிச் சில்லாவில் உள்ள தொரு நகரம். தலவிசேடம் பார்க்க. 1 |
4193. | அந்நக ரதனில் வாழ்வா ரறுவையர் குலத்து வந்தார் மன்னிய தொழிலிற் றங்கண் மரபின்மேம் பாடு பெற்றார் பன்னகா பரணற் கன்பர் பணிதலைக் கொண்டு பாதஞ் சென்னியிற் கொண்டு போற்றுந் தேசிகார் நேச ரென்பார். 2 |
(இ-ள்) அந்நகரதனில்........வந்தார் - அத்திருநகரத்தில் வாழ்கின்றவர்; அறுவையர் என்னும் சாலியர் குலத்தில் அவதரித்தவர்; மன்னிய...பெற் |