றார் - நிலைபெற்ற சீவனத் தொழிலில் தமது மரபில் மேன்மையுற்றனர்; பன்னகாபரணற்கு.....தேசிகனால் - பாம்பினை அணியாக அணிந்த சிவனுக்கு அன்பர்களா யுள்ளவர்களது பணியினைத் தலையாக மேற்கொண்டு அவர்களது திருப்பாதங்களைத் தலையிற் சூடிப் பணிந்து துதிக்கும் ஒளியினையுடையவர்; நேசரென்பார் - நேசரென்று சொல்லப்படுபவர். |
(வி-ரை) அறுவையர் குலம் - துணி செய்பவர் மரபு; அறுவை வாணிகர் மரபு என்பர்; தொகை நூல்களுள் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என்னும் சங்கப்புலவர் பெயர் காணப்படுகின்றது; அறுவை - தறியினின்றும் அறுத்தெடுப்பதனால், உடை, அறுவை எனப்படும்; துணித்தெடுப்பதால் துணியென்றும், வெட்டி எடுப்பதால் வேட்டி என்றும் இவ்வாறு காரணப் பெயர்கள் பலவும் காண்க. |
மன்னிய....பெற்றார் - இஃது உலக நிலையில் அவரது குலத்தொழில் மேம்பாடு பற்றியது; திருநீலக்கண்டர், திருநாளைப்போவார், அதிபத்தர் முதலிய நாயன்மார்களது வரலாறுகளும் ஈண்டுச் சிந்திக்கற்பாலன. குலத்தொழிலில் மேம்பட்டு அத்தொழிலினைப்பற்றி நின்றே திருத்தொண்டின் மேன்மை யொழுக்கம் செலுத்திய சிறப்பும் காண்க. |
பன்னகாபரணர் - சிவபெருமான்; பன்னகம் - பாம்பு; பாம்பினை அணியாகக் கொண்டவர். |
அன்பர் பணி தலைக்கொள்ளுதல் - அடியார்களது பணியினைச் சிரமாக மேற்கொண்டு செய்தல்; “அன்பர்பணி செய்யவெனை யாளாக்கி விட்டுவிட்டால், இன்பநிலை தானேவந் தெய்தும் பராபராமே” (தாயுமா). |
பாதம் சென்னியிற் கொண்டு - அன்பர்களது திருவடியில் வணங்கி. |
பணி தலைக்கொள்ளுதல் என்றதனால் மனத்தின் றொழிலும், சென்னியிற் கொண்டு என்றதனால் உடலின் றொழிலும், போற்றும் என்றதனால் வாக்கின்றொழிலும் ஆக முக்காரணங்களாலும் செய்யும் வழிபாடு கூறப்பட்டது. முன் பாட்டிற் கூறிய குறிப்பும் காண்க. மேல்வரும் பாட்டில் மேலும் விரித்தல் காண்க. |
தேசினார் - அடியார் பணிகளை முட்டாமற் செய்வோர் பால் ஞானவொளி விளக்கமுண்டாம் என்பது; தேசினார் நேசர் - நேசர் என்ற சொற்பொருள் விரித்தபடி. தேசு - ஒளி - புகழ்; ஈண்டு அன்பு என்னும் பொருள் குறித்து நின்றது. |
4194. | ஆங்கவர் மனத்தின் செய்கை யரனடிப் போதுக் காகக்கி ஓங்கிய வாக்கின் செய்கை யுயர்ந்தவஞ் செழுத்துக் காக்கி தாங்குகைத் தொழிலின் செய்கை தம்பிரா னடியார்க் காகப் பாங்குடை யுடையுங் கீளும் பழுதில்கோ வணமு நெய்வார். 3 |
4195. | உடையோடு நல்ல கீளு மொப்பில்கோ வணமு நெய்து விடையவ ரடியார் வந்து வேண்டுமா றீயு மாற்றால் இடையறா தளித்து நாளு மவர்கழ லிறைஞ்சி யேத்தி அடைவுறு நலத்த ராகி யரனடி நீழல் சேர்ந்தார். 4 |
4194. (இ-ள்) ஆங்கவர்......போதுக்காக்கி - அந்நிலையில் அவர் தமது மனத்தின் றொழிலைச் சிவனது திருவடித் தாமரைக்கு ஆக ஆக்கி; ஓங்கிய.......எழுத்துக்காக்கி - மேன்மேல் ஓங்கிய வாக்கினது தொழிலை உயர்வுடைய திருவைந்தெழுத்தினுக்காக |