பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்510

     உயர்ந்த - உயர்த்துகின்ற எனப் பிறவினையாகப் பொருள் கொண்டு
ஆன்மாக்களைப் பிறவிப் படுகுழியினின்றும் மேல் எடுத்து உயர்த்தும் என்ற
குறிப்புப்புட உரைத்தலுமாம்.
 

     கைத்தொழிலின் செய்கை - கைத்தொழில் - இங்கு உடம்பாற்
செய்யும்தொழில்கள் எவையும் என்ற பொருள்தந்து நின்றது. தாங்குதல் -
மேற்கொள்ளுதல்.
 
     பாங்கு - உரிய பண்பு; நிலை; இதனை உடை, கீள், கோவணம் என்ற
மூன்றுக்குங் கூட்டுக.
 
     பழுதில் கோவணம் - பழுதில் - “ஓங்கு கோவணப் பெருமை” (515) என்று
பலவும் அமர்நீதியார் புராணத்துட் கூறுவன வெல்லாம் இங்கு நினைவு கூரவைத்து
இந்த அடைமொழி தந்தோதினார்.
 
     மேல் வரும் பாட்டிலும் “ஒப்பில் கோவணம்” என்பது காண்க. பிறிதி னியைபு
நீக்கிய விசேடணம்.
 
     நெய்வார் - முற்றெச்சம்; நெய்வார் - நெய்து - அளித்து - ஏத்தி - ஆகிச் -
சேர்ந்தார் என்று முடிபுகொள்க.                                       3
 
     4195. (வி-ரை) நெய்து - நெய்வார் (ஆகி) - நெய்து - அளித்து என்று
கூட்டுக. முன்னர் நெய்வார் என்ற முற்றெச்சம். மனவெழுச்சியினையும் தொழில்
முயற்சியினையும் குறித்தது; இங்கு நெய்து என்றது தொழில் முற்றியநிலை குறித்தது.
 
     வேண்டுமாறு - வேண்டும்படியே; வேண்டியவாறே.
 
     ஈயுமாற்றினால் அளித்தல் - ஆறு - முறை; கொடுக்கும் வகையாவது மன
நெகிழ்ச்சி, பணிவு, இன்சொல் முதலிய முறைமையுடன் ஈதல்; அவர் -அடியவர்.
 
     அடைவுறும் நலம் - அறித்தலாலும், இறைஞ்சி ஏத்தலாலும் அடையும் நலம்;
அடைவுறும் - அவர்களையே தமது தலைவர் என்றுட்கொண்டுசாரும் என்றலுமாம்.
 
     அறியுமாற்றால் - என்பதும் பாடம்.                               4
 

வேறு
 

4196. கற்றை வேணி முடியார்தங் கழல்சேர் வதற்குக் கலந்தவினை
செற்ற நேசர் கழல்வணங்கிச் சிறப்பான் முன்னைப் பிறப்புணர்ந்து
பெற்ற முயர்த்தார்க் காலயங்கள் பெருக வமைத்து மண்ணாண்ட
கொற்ற வேந்தர் கோச்செங்கட் சோழர் பெருமை கூறுவாம்.             5
 
     (இ-ள்) கற்றை.....வணங்கி - கற்றையாகிய சடையினை முடியாகவுடைய இறைவரது
திருவடிகளைச் சேர்தவற்காக முன் தம்மைக் கலந்திருந்த வினைச் சார்புகளை அறுத்த
நேசநாயனாரது திருவடிகளை வணங்கி, அத்துணைகொண்டு, சிறப்பான் முன்னைப்
பிறப்புணர்ந்து - தவமுதிர்வாகிய சிறப்பினாலே தமது முன்னைப் பிறப்பினை உணர்ந்து,
அவ்வுணர்ச்சியுடனே வந்தவதரித்து; பெற்றம்.....வேந்தர் - இடபக்கொடியை உயர்த்திய
சிவபெருமானுக்கு ஆலயங்கள் அனேகம் எடுத்து, மண்ணுலகம் காவல்பூண்ட
அரசாட்சிசெய்து வெற்றியையுடைய வேந்தராகிய; கோச்செங்கட் சோழர்....கூறுவாம் -
கோச்செங்கட் சோழரது பெருமையினைக் கூறத்தொடங்குகின்றோம்.
 
     (வி-ரை) ஆசிரியர் தமது மரபின்படி இதுவரை கூறிவந்த சரிதத்தை வடித்து
முடித்துக்காட்டி மேல்வரும் புராணத்துக்குத் தோற்றுவாய் செய்யும் வகையாலே
அச்சரிதச் சுருக்கமும் அறிவிக்கின்றார்.