பக்கம் எண் :

பெரியபுராணம்513

 

பற்றிக் கூறினார். செங்கண்ணான் - நாயனாரது பெயர். அப்பெயர் அவரது தாயார்
இட்டழைத்த செல்வப் பெயராகும் (4206); “செங்கட் பெயர்ச் செம்பியர்கோன்” என்பது
முதலாகத் தேவாரத் திருவாக்குக்களினும் வழங்கியது காண்க.
 

     வகை :- மை வைத்த.....சோழன் - நீலகண்டராகிய சிவனது நெறியல்லாமல்
மற்றை எந்நெறியினையும் பொருள் என்று கருதாத தெய்வத்தன்மையுடைய குடியில்
வந்த சோழனார்; முன்பு.....வந்து - முன்னைப் பிறப்பில் சிலந்தியாயிருந்து இறைவரது
திருமேனிமேற் சருகுவிழாமை, தன் வாய்நூலினால் மேற்கட்டிப் பந்தரினைச் செய்து,
அதனால் சைவத்திறத் துருவின் வந்து அவதரித்து; தரணி....செய்வித்தவன் -
இந்நிலவுலகிலே சிவனுக்கு நீடிய மாடக்கோயில்களாகிய ஆலயங்கள் அமைத்தவர்;
கோச்செங்கணா னெனும் செம்பியனே- கோச்செங்கணான் என்னும் பெயரினையுடைய
சோழமன்னராவார். (81)
 
     சிற்றம்பலத்தைச் செம்பொன் அணிந்து - சிற்றம்பல முகட்டினைச்
செம்பொன்னினால் எழுதிவேய்ந்து; சிவலோகம் ....இருந்தோன் - சிவலோகமடைந்து
இறைவரது திருவடிக்கீழ் அமர்ந்தவரது; குலமுதல் என்பர் - வழிவந்தவர் என்று
சொல்வர்; நல்ல.......மறைவிரித்தான் - நல்ல மணமுள்ள மலர்களையுடைய தில்லை
இறைவரது திருவம்பலத்தைச் சூழ மறையவர்க்கு மாளிகைள் பல அமைத்தவரும்
நிற்ப...நித்தனையே - மணமுடைய வேப்பாமாலைனயயுடைய கோச்செங்கணான்
என்னும் நித்தியத்துவம் வாய்ந்தவருமாகிய சோழரையே. (82)
 
     81.    தெய்வக்குடிச்சோழன் - தெய்வத்தன்மை வாய்ந்த சோழர் குடியில் -
வந்தவர்; முன்பு......வந்து - இவ்வரலாற்றினை விரிநூல் (4197 - 4206)
விரித்துரைத்தது; ஆலயங்கள் செய்வித்தவன் - 4208 - 4211 பார்க்க; நீடாலயங்கள் -
மாடக்கோயில்கள். செய்வித்தவன் - “மந்திரிகள் தமை ஏவி” (420) என்பது விரிநூல்
சைவத்துரு - சிவனடியார். செம்பியன் - சோழன்.
 
     82.    சிற்றம்பலத்தை (முகடு)ச் செம்பொன் அணிந்து என்க.
செம்பொன்.......கழற்கீழிருந்தோன் - இரணியவர்மச்சக்கரவர்த்தி; கோயிற்
புராணத்துள் இவ்வரலாறு விரிக்கப்பட்டுள்ளது; இவர் பணி செய்தது சிற்றம்பலம்;
ஆதித்தச் சோழர் பொன்வெய்ந்தது பொன்னம்பலம் (அதற்கு முன்புள்ளது) (4111);
அநபாயர் பொன்வேய்ந்தது பேரம்பலம் (இவற்றின் வேறாயது) (8); இவை
ஒன்றோடொன்று மயங்கி யறியத்தக்கனவல்ல; குலமுதல் - வழித்தோன்றல்;
“குடிமுதலோர்” (4111); ஈசனைக்சூழ மறைவளர்த்தான் - திருவம்பலத்தைச் சுற்றிலும்
திருவீதிகளில் மறையவர்களுக்குத் திருமாளிகைகள் பல சமைத்தார்; (4212); மறை -
திருவுடையந் தணர்களது வீடுகள்; வளர்த்தல் - கட்டுதல்; நிம்ப நறுத்தொங்கல் -
“தென்னவனா யுலகாண்ட” (தொகை); பாண்டிய நாட்டினையும் இவர் ஆட்சி செய்தனர்
என்பது சரிதவரலாறு; நித்தன் - சிவபதமாகிய அழியா நிலைபெற்றவர்.
 
     விரி;- 4197. (இ-ள்) துலையில்.......சோணாட்டில் - துலைத்தட்டில் வைத்துப்
புறாவின் எடைக்குச் சமமாகத் தனது உடற் றசையை நிறுத்துக் கொடுத்த
சிபிச்சக்கரவர்த்தி மரபில் வரும் சோழர்களுக்கு உரிமையாகிய சோழநாட்டில்;
அலையில்...மருங்கு - அலைகளினால் முத்துக்களையும் அகிலோடு சந்தனத்தையும்
கொண்டுவரும் அழகிய நீரினையுடைய காவிரியாற்றின் மணிகளைக் கொழிக்குங்
கரையில் பெருகுகின்ற சந்திர தீர்த்தத்தின் பக்கத்திலே; குளிர் சோலை....உளது -
குளிர்ச்சியை யுடைய சோலைகளில் நிலையாக வளர்ந்தோங்குகின்ற மரங்கள்
நெருங்கிய நீண்ட குளிர்ந்த கானம் ஒன்று உள்ளது; (ஆல் - அசை).