(10) தமது மக்களுக்கு உரியபருவத்தில் முடிசூட்டித், தாம் தவஞ்சார்தல் நமது நாட்டில் அரிய பழைய அரசமரபுகளின் வழக்கு. (4207) |
(11) முன்பிறப்பின் நினைவுடன் பிறந்து நல்வாழ்வு பெறுதல் யாவர்க்கும் அரிது. அது சிவன்றிருவருளாளன்றி அமையாது. (4208) |
(12) முன்பிறப்பிற்றாம் செய்த பணியின் குறையினை அறிந்து பின்னைப் பிறப்பில் அதனை மனமார முற்றுவிக்கப் பெறுவது பெருந்தவப் பயனாகச் சிவனருனால் வருவது. (4208) |
(13) இறைவர் எழுந்தருளியுள்ள தலமரங்களை மிகப்புனிதமாகப் பாதுகாத்து அவற்றின்கீழ் எழுந்தருளும் இறைவருக்கு அதனோடு உடனாகத் திருப்பணி செய்தல் வேண்டும். (4209) |
(14) சிவனுக்குப் பெருங்கோயில்கள் பல எடுத்தல் பெருந்தவப் பயனால் வருவது. (4210) |
(15) சிவனுக்கு ஆலயங்கள் வகுப்போர் அதற்கு உரியவாறு அமுதுபடி முதலானவற்றுக்கு பெருஞ் செல்வங்கள் விருப்பமுடன் மிக அமைத்தல் வேண்டும். (4211) |
(16) தில்லைவாழ்ந்அதணர்களுக்கு மாளிகைகள் சமைத்தல் அவர்களுள் ஒருவரான சபாநாயகருக்குக் கோயில் சமைத்ததனோடொத்த பயனுடையது. (4212) |
(17) திருத்தொண்டர்களை இமையவர்களும் அடிபோற்றுவர். (4213) |
தலவிசேடம் - திருவானைக்கா ;- III - பக். 513 - பார்க்க. |
கோச்செங்கட் சோழரது - சிறப்பு ;- இவர் சைவசமய பரமாசாரியர்கள் மூவராலும் பல திருப்பதிகங்களுள்ளும் போற்றப்படும் பெருமைவாய்ந்தவர்; “புத்தியினார் சிலந்தியுந்தன் வாயி னூலாற் புதுப்பந்த ரதுவிழைத்துச் சருகான் மேய்ந்த, சித்தியினா லரசாண்டு சிறப்புச் செய்து சிவகணத்துப் புகப்பெய்தார்” திறலான் மிக்க, வித்தகத்தால் வெள்ளானை விள்ளா வன்பு விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப், பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டபடியே னுய்ந்த வாறே"; (அரசு - தேவா); “மையகண் மலைமகள் பாக மாயிருள், கையதோர் கனலெரி கனல வாடுவர், ஐயநன் பொருபுன லம்பர்ச் செம்பியர், செய்யக ணிறைசெய்த கோயில் சேர்வரே” (பிள் - தேவா), “கருவரை போலரக் கன்கயி லைம்மலைக் கீழ்க்கதறப் பொருவிர லாலடர்ந்த தின்னருள் செய்த வுமாபதிதான், திரைபொரு பொன்னிநன்னீர்த்துறை வன்றிகழ் செம்பியர்கோன், நரபதி நன்னிலத்துப் பெருங்கோயி யைந்தவனே” (நம்பி - தேவா) முதலிய எண்ணிறந்த திருவாக்குக்கள் காண்க. |
(2) இவர் திருவருளால் முற்பிறப்பின் நிலையறிந்து பிறந்து திருத்தொண்டுடனே மண்ணாண்ட சிறப்புடையவர். |
(3) முன்னறிந்த நிலையனால் இவர் அமைத்த சிவன் கோயில்கள் அனைத்தையும் யானைபுகாத மாடக்கோயில்களாகவே யமைத்தார். |
(4) இவர் சிவனுக்கு மாடக்கோயில்களை அமைத்த சிறப்புப்பற்றி வைணவப் பெரியார்களும் பாராட்டித் துதித்த பெருமை இவருக்குரியது. |
(5) இவர் அமைத்த மாடக்கோயில்கள் தேவாரப்பாடல் பெற்ற சிறப்புடையன. அத்தேவாரங்களுள் இவரும் சேர்த்துப் பாடப்பெற்றுள்ளனர். |
(6) இவர் முன்னர்ச் சிவகணங்களுள் ஒருவராய் மாலியவான் என்ற பெயருடன் சிவப்பணி பெருகச்செய்தனர் என்றும், அப்பணியில் கணத்தவராய்ப் |