| பணிபெருகப் புரிந்த மற்றொரு புட்பதந்தருடன் அப்பணியில் இகலி இவ்வாறு சிலந்தியாய் வந்து பிறந்தனர் என்றும், இந்நிலையின் மீண்டும் சோழ அரசராய் வந்து பிறந்து வீடுபெற்றனர் என்றும் , இவ்வகையால் இவரது மூன்று பிறப்புக்களின் தொடர்ந்த சிவபுண்ணிய வரலாறு கேட்கப்படும் பெருமை இவருடைய சிறப்பாகும். | (7) இனி, இவர் திருவானைக்காவில் இறைவருக்கு எடுப்பித்த விமானமும் ஆலயமும் முன்னமே அவருக்குச் சாத்தும்படி தேவத்தச்சனால் அமைக்கப்பட்டுக் கொண்டகை மலைச்சாரலில் கெண்டகை நதியில் இடப்பட்டுக் கோடியுருத்திரரால் பூசிக்கப்பட்ட இறைவருக்குச் சாத்தப்பட்டிருந்ததென்றும், அதனை, இறைவர் அருளியபடி அறிந்து சென்று இவர் கொணர்ந்து, இங்கு இறைவருக்குச் சாத்தினார் என்றும் அறியப்படுகின்ற பெருமை இவருடையதாகும். | 68. கோச்செங்கட்சோழ நாயனார் புராணம் முற்றும் | | |
|
|