பக்கம் எண் :

பெரியபுராணம்533

 

யாவரும் உயர்வாய் நினைக்கத் தகுந்த ஒப்பற்ற திருநீலகண்டப் பெரும்பாணனாரை;
நீள்....தமிழொடு - நீண்ட கிளைகள் ஒத்து மலர்கின்ற சோலைகளையுடைய
சீகாழியர்களது தலைவராகிய பிள்ளையாரது செந்தமிழ்ப் பதிகங்களுடனே;
இசைபுனைய.....பூதலத்தே - பண் அமைய யாழில் வாசிக்க இவ்வுலகில்
சிவபெருமான்றிருவருள் பெற்றவர் என்று அறிஞர்கள் கூறுவர்.
 

     தனை......புலியூர் - தன்னை வேறு எப்பதியும் ஒப்புக் கூறுதற்கரிய பதி
திருஎருக்கத்தம்புலியூர் என்பதாம். “ஐயர் நீரவ தரித்திட விப்பதி யளவின்
மாதவமுன்பு, செய்தவாறு” (2077) என்று ஆளுடைய பிள்ளையார் இப்பதியினைப்
பாராட்டிய கருத்து ஈண்டு நினைவுகூர்தற்பாலது; புகழோன் - பாணனை - என்பர் -
என்று கூட்டுக. செந்தமிழொடிசை புனைய - செந்தமிழ் பாடிய அவ்வப்போதே
அதனை யாழிலிடப்பெற்ற; பரனருள் பெற்றவன் - இவ்வாறு, பிள்ளையாரருளும்
திருப்பதிகங்களை உடனிருந்து அவ்வப்போது யாழிலிடும் பேறு பெறவேண்டு மென்று
பாணனார், பிள்ளையார்பால் வேண்டிக்கொண்டு, அவர் இசைந்தருளப் பெற்றனர்.
(2038-2039); பிள்ளையாரிசைந்தருளியதனையே பானருள் பெற்றனன் என ஈண்டு
நம்பியாண்டார் வகுத்தருளினர் என்க. என்னை? “எனதுரை தனதுரை யாக” என்பது
பிள்ளையார் திருவாக்கினாற் பெறப்படும் உண்மையாதலி னென்க; அன்றியும்
இப்பெரும்பேறு சிவன்றிருவருளா லன்றிப் பெறலாகாதது என்றலுமாம். செந்தமிழ் -
திருப்பதிகம்; தமிழொடு - தமிழ்பாடும் போதே; பாடுந்தோறும் உடனே; ஊரும்
வரலாறும் பண்பும் வகைநூல் வகுத்தது.
 
     விரி: - 4215. (இ-ள்) எருக்கத்தம்புலியூர் மன்னிவாழ்பவர் - திருஎருக்
தத்தம்புலியூரில் நிலைபெற்று வாழ்பவர் (திருநீலகண்ட யாழ்ப்பாணர்);
இறைவன்றன்.....பரவுவார் -அவர் இறைவரது சீர்களைச் சிறப்புடைய தகுந்த யாழில்
அமைத்துப் போற்றுபவர்; செழும்.....போய் - செழிப்புடைய சோழநாட்டிலே
விருப்பமிக்க பதிகளில் எல்லாம் வணங்கிப்போய்; விளங்கு.....சென்றார் - விளக்க
முடைய திருநான்மாடக்கூடல் என்னும் மதுரையில் மலைவில்லேந்திய இறைவர்
நிலைபெற எழுந்தருளியுள்ள திருவாலவாயினைப் பணிவதற்குச் சென்றனர்.
 
     (வி-ரை) வாழ்பவர் - பரவுவார் - சென்றார் - என்று கூட்டிக்கொள்க.
இவற்றுக்குத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்ற எழுவாய் அவாய்நிலையால்
வருவித்துரைத்துக் கொள்க. முன்னமே ஆளுடைய பிள்ளையார் புராணத்துள் (2029 -
2039; 2075 - 2077) இவரது வரலாறுகள் தொடங்கிக் கூறியருளியபடியால், இங்குச் சரித
வரலாற்றுக்குரிய நாடுநகர முதலிய தொடக்க நிலைகள் ஒன்றும் கூறாது, தொடங்கினார்.
இவ்வாறே அப்பூதி நாயனார் புராணத் தொடக்க அமைப்பும், ஆண்டுரைத்தவையும்
காண்க.
 
     இறைவன்.......பரவுவார் - பண்பும் அன்பும் கூறியபடி; பரவுவார் - பரவும்
தன்மையுடையவர் என்று பண்பு குறித்தது.
 
     சோணாட்டில்...போய் - நடுநாட்டிலிருந்து பாண்டியநாடு நோக்கிச் செல்பவர்
இடையில் சோழநாடு கடந்து செல்லவேண்டும்; அவ்வாறு செல்லும் வழியில் நேர்பட்ட
பதிகளில் தாம் விரும்பிய பதிகளிலெங்கும் வழிபட்டு மேற்சென்றனர் என்பதாம்.
 
     இவ்வாறு பாணனார் சோழநாட்டுப் பதிகளை வணங்கி, மதுரையினைப் பணிந்து,
மீண்டு திருவாரூரில் வந்து வணங்கிச், சீகாழியினைச் சார்கின்றவரையில் உள்ளது
அவரது சரிதத்தின் முற்பகுதி; இதுவே இப்புராணப் பகுதியில் விரித்துப் பேசப்