பக்கம் எண் :

பெரியபுராணம்537

 

     ஏவ - திருமுன்பு கொண்டு புக்கார் - நாயன்மார்கள் காலத்தில் சாதி முறை இருந்ததென்றும், அதனைப் போக்கும் அன்புநெறியில் அவர்கள் ஒழுகினர் என்றும், பாணர் மரபினர் கோயிலுக்குள் செல்லலாகாது என்ற பொல்லா விதியை உடைக்க இங்கு ஆண்டவன் திருவுள்ளம் பற்றினன் என்றும், திருக்கோயிலில் தீண்டாமை
பாராட்டுவோர் ஆண்டவன் றிருவுள்ளக் குறிப்புக்கு மாறுபட்டு நடப்பவரே யாவர்
என்றும், பிறவாறும், ஈண்டு விசேட ஆராய்ச்சி உரைகண்டு குறிப்பிடுவாருமுண்டு;
சாதிமுறை, தீண்டாமை முதலியவற்றின் உண்மை நிலைபற்றி முன் பல விடங்களிலும்,
சிறப்பாகத் திருநாளைப்போவார் நாயனார் புராணத்துள்ளும், பிறாண்டும்
விரித்துரைக்கப்பட்டன. கடைப்பிடிக்க. ஈண்டுத் திருநீலகண்டப் பாணனாரைத்
திருமுன்கொணர இறைவர் தொண்டர்க் கெல்லாம் கனவில் ஏவினாரே யன்றி, அவரது
மரபினர் எல்லாரையும் திருமுன்னர்க் கொண்டு புக ஏவியருளினாரல்லர்; அவ்வாறே
திருநாளைப் போவார் நாயனாரை மட்டில் எரியின்கண் மாயப்பிறப்பினை ஒழித்து
வரும்படி ஏவினாரன்றி அம்மரபினர்கள் பிறரைப்பற்றி ஏவுதல் இல்லை. இவ்வாறு
அவ்வவர்க்குச் செய்த அருள் அவ்வவர் நிலைபற்றிய தன்றி அவர்தம் மரபுபற்றிய
தன்று என்பது வெளிப்படை. இவர்கள் தன்மைபற்றி அங்கங்கும் தனித்தனி
ஏவியருளிய நிலையினால் சாதிமுறை ஒழுக்கவிதிகள் திருவுள்ளக் குறிப்புக்கடுத்த
தென்பதே முடிவாகும். ஒழுக்க அறநூல்கள் இறைவர் வருத்தவையேயாம்.
அவ்வப்போது நிகழும் அரசியலாற்றின் சமூகநிலைகள் பற்றி எழும் கருத்துக்களை
அறநூல் ஒழுக்க விதிகளுள்ளும் சமயநிலை விதிகளுள்ளும் புகுத்தி யிடர்ப்படுதல்
வேண்டாத காரியம் என்க.
 

     ஈண்டு யாழ்ப் பெரும்பாணனாரை அவரது தன்மைபற்றி, முன்பு, ஆளுடைய
பிள்ளையார் சீகாழிப்பதியில் புறத்திரு முன்றிலினுள் அழைத்துச்சென்று அங்கு நின்று
யாழியற்ற அருள்புரிந்தருளினர். இங்குத் திருவாலவாயினுள்ளும் பாணனார் தாம்
கோயில் வாயிலினின்று யாழியற்றினர்; இறைவர் ஏவத் தொண்டர்கள் அவரைத்
திருமுன்பு கொண்டு புக்கனர். பின்னர்த் திருவாரூரில் கோயில்வாயில் முன்அடைந்து
யாழியற்றிப்பாட, வடதிசையில் வாயில் வேறு வகுப்பப் புகுந்து வணங்கும் நிலையும்
காணப்படும் (4222). இவற்றின் நுட்பங்கள் ஆராயத்தக்கன; இங்கும், உட்புக்கது
இறைவர் பணியாம் என்று தமக்கும் மெய்யுணர்தலாலே பாணனார், திரு முன்பிருந்து
பாடினர் (4218) என்பதும் கருதுக.                                   3
 
4218. அன்பர்கள் கொண்டு புக்க பொழுதினி லரிவை பாகன்
றன்பெரும் பணியா மென்று தமக்குமெய் யுணர்ந்த லாலே
மன்பெரும் பாண னாரு மாமறை பாட வல்லார்
முன்பிருந் தியாழிற் கூடன் முதல்வரைப் பாடு கின்றார்.             4
 
4219. திரிபுர மெரித்த வாறுந் தேர்மிசை நின்ற வாறுங்
கரியினை யுரித்த வாறுங் காமனைக் காய்ந்த வாறும்
அரியயற் கரிய வாறு மடியவர்க் கெளிய வாறும்
பரிவினாற் பாடக் கேட்டுப் பரமனா ரருளி னாலே,                 5
 
4220. அந்தரத் தெழுந்த வோசை “யன்பினிற் பாணர் பாடுஞ்
சந்தயாழ் தரையிற் சீதந் தாக்கில்வீக் கழியு” மென்று