| | “சுந்தரப் பலகை முன்னீ ரிடு” மெனத் தொண்ட ரிட்டார்; செந்தமிழ்ப் பாண னாருந் திருவருள் பெற்றுச் சேர்ந்தார். 6 |
4218. (இ-ள்) அன்பர்கள்.....பொழுதினில் - அன்புடைய அடியவர் முன்கூறியவாறு கொண்டு திருமுன்பு புகுந்தபோது; அரிவைபாகன்.....உணர்தலாலே - உமையம்மைபங்கராகிய இறைவரது பெரிய ஆணையே யாகும் இஃது என்று தமக்கும் உணர்வினுள்ளே உண்மை புலப்படப் பெற்றமையினாலே; மன்.....பாடுகின்றார் - நிலைபெற்ற பெரிய யாழ்ப்பாணனாரும் பெரிய வேதங்களைப் பாடவல்லாராகிய திருவாலவாயுடையாரது திருமுன்பு இருந்துகொண்டு, அக்கூடலாலவாய் முதல்வரைப் பாடுகின்றாராகி; 4 |
4219. (இ-ள்) வெளிப்படை; முப்புரங்களையும் எரித்த பண்பினையும், (அதன்பொருட்டுத்) தேரின் மீதுநின்ற தன்மையினையும், யானையை, உரித்த வரலாற்றினையும், மன்மதனைக் காய்ந்த நிலையினையும், திருமாலுக்கும் பிரமதேவனுக்கும் அறிதற்கரியராயின வரலாற்றினையும், (ஆயினும்) அடியவர்களுக்கு எளியராயுள்ள ஆற்றினையும்; அன்பினாலே பாடக் கேட்டு இறைவனாரது திருவருளினாலே; 5 |
4220. (இ-ள்) அந்தரத்து எழுந்த ஓசை - ஆகாயத்தில் எழுந்த ஓசை யானது; அன்பினில்........என - அன்பினாலே பாணனார் பாடுகின்ற சந்தத்தினையுடைய யாழானது தரையில் உள்ள சீதந்தாக்கினால் நரம்புகளின் இறுக்கம் சிதையுமாதலின் அழகிய பலகையினை முன்னர் நீங்கள் இடுங்கள் என்று கூற; தொண்டர் இட்டார் - தொண்டர்கள் அவ்வாறே பலகை இட்டார்கள்; செந்தமிழ்.....சேர்ந்தார் - செந்தமிழ்ப் பாணனாரும் திருவருளினைப் பெற்று அதனில் இருந்தனர். 6 |
இம்மூன்று பாட்டுக்ளும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
4218. (வி-ரை) புக்க - திருமுன்பு புகவைத்த; பணி - கட்டளை. |
அரிவை பாகன்......உணர்தலாலே - இஃது இறைவரது கட்டளையேயாம் என்று அன்பர்கள் அறுவுறுத்தி அழைத்துக் கொண்டு புக்கதேயன்றித் தமது உணர்வினுள்ளும் இறைவரது திரு அருளினாலே உணர்த்தப்பெற்று உணர்ந்தபடியினாலே; மெய் - உண்மைத் தன்மை. தமது மரபின் நிலை ஒழுக்கின்படி திருவாயிலின் நின்றபடி பாடுகின்ற பாணனார் அவ்வொழுக்கம் இறைவரது கட்டளையாயினவாறே, இச்செயலும் இறைவரது கட்டளையாமென்று அடியவர்கள் சொல்லக் கேட்கும் திருவருள் உணர்த்தவும் உணர்ந்தனர். ஆதலின் மரபொழுக்க நிலையினைத் தாண்டித் திருமுன்பு இருந்து பாட ஒருப்பட்டனர் என்பதாம். அரிவைபாகன் - ஈண்டு அருளுடைமைக் குறிப்பு. |
மாமறை பாடவல்லார் - இறைவர்; முன்பு - திருக்கோயிலினுள் நேர்திருமுன்பில். யாழிற் பாடுகின்றார் - யாழியற்றி அதனுள், பாட்டின் சொல்லிசை யமைதிவரப் பாடுகின்றாராகி; பாடுகின்றார் - முற்றெச்சம்; பாடுகின்ற பாட்டின் பொருள் மேல்வரும் பாட்டில் கூறுதல் காண்க. பாடுகின்றார் - பாடக்கேட்டு - என வரும் பாட்டுடன் முடிக்க. பாடவல்லார்முன் - பாடுகின்றார் என்பது அணிநயம். |
கூடல் முதல்வரை - பாட்டின் பொருளாவார் கூடனாயகர் என்பது. 4 |
4219. (வி-ரை) இப்பாட்டினால் இறைவரைப் பாணனார் யாழியற்றிப் பாடியபாட்டின் பொருள் கூறப்பட்டது. |
திரிபுரமெரித்த...எளியவாறும் - இவை பாணனார் பாடிய பாடற்பொருள்கள். இறைவரது அருட் செயல்களையும், அவற்றாற் போந்த திருவருட் பண்புகளையும் பொருளாக் கொண்டன என்பதாம். |