பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்546

 
     (4) இங்கு யாழ்ப்பாணருக்குத் திருவாலவாயுடையாரும் திருவாரூரிறைவரும்
செய்த பேரருள்களின் திறம் இவ்வாற்றால் வைத்துணர்தற்பாலது. கண்ணப்பர் -
திருநாளைப்போவார் வரலாறுகளும் இங்கு வைத்து ஒப்புநோக்கிச் சிந்திக்கற் பாலன.
 
     (5) சிவபெருமானது புகழ்கள் மறக்கருணை அறக்கருணை - (நிக்கிரக
அநுக்கிரகங்கள்) கோபப்பிரசாதம் - என்றிவ்விரண்டு திறத்துள் வைத்து வரலாறுகள்
பற்றித் துதிக்கற்பாலன.
 
     (6) பரமாசாரியரது திருவடிகளை அடைந்து அவரருள் பெற்றோர் பரமன் திருவடி
சேர்ந்து மீளா நெறி பெற்றுய்வர். (4225)
 
     (7) மறையவர் பெருமானாகிய ஆளுடையபிள்ளையாரது திருக்கூட்டத்துடன்
சேர்ந்து உடனிகழ்ந்து முத்திபெறும் பேறு திருநீலகண்ட யாழ்ப்பாணனார் பெற
நேர்ந்தநிலை முன்னைத் தவமுதிர்ச்சியால் அன்பு மேலிட்டு ஒன்றுபட்ட முறை
பற்றியதாகும்.
 

69. திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார் புராணம் முற்றிற்று