பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்548

 

யாண்டார் நம்பிகள் இவ்விருவருக்கும் இரண்டு பாட்டுக்களால் துதியும் வரலாறுமாகத்
திருவந்தாதியுள் இயற்றிவைத்தருளினர். “அடிமை கேட்டுவப்பார்” என்பது காண்க.
அதனைப் பின்பற்றியே ஆசிரியர் இவ்விருவர்க்கும் தனித்தனித் தோத்திர
வகையாலமைந்த புராணங்களும், வரலாறும் பண்பு முரைக்கு முகத்தால்
உரைத்தருளினர்.
 

     வகை :- தலம் விளங்கும்.....புகழோனை - இந்நிலவுலகில் விளங்குகின்ற
திருநாவலூரில் சடையனார் என்ற பெயரையுடைய, சிவமறையோர் குலம் விளங்கும்
புகழினையுடையவரை; குவலயத்தின்.....பயந்தமையே - இவ்வுலகில் நன்மைகள் எல்லாம்
விளங்கும்படிக்கும், நாம் விளக்கமடைந் தோங்கும்படிக்கும், நல்ல தவத்தாலாகிய பயன்
விளங்கும்படிக்கும், திருவாரூர் நம்பிகளை முன்பெற்றெடுத்த தன்மையினைப் பற்றி;
உரைப்பர் - எடுத்துப் புகழ்ந்து கூறுவர்கள் (அறிஞர்கள்).
 
     தலம் - நிலவுலகம்; தலம்விளங்கும் - உலகில் பெருமை பெற்று விளங்கும்;
இவ்விளக்கமாவது சைவசமய பரமாசாரியர் திருவவதரிக்கும் இடமாயிருக்கும்
பேறுபெறுதல்; “பிறந்தருள வுளதானால்” என்று முன் (1276 - ல்) உரைத்த கருத்துக்
காண்க.
 
     சடையன் என்னும் - சடையன் - இறைவரது பெயர்; அதனை மக்களுக்கு
இட்டு வழங்குவர்; “கலையர்” என்பது போல; என்னும் - எனப்படும்; குலம்
விளங்கும் புகழ்
- குலம் விளக்கமடைதற்கேதுவாகிய புகழ்; இவர் புகழினால் இவரது
குலம் விளங்கிற்று என்பதாம்; குலம் - இங்குச் சிவவேதியர் குலத்தினைக் குறித்தது;
பயந்தமையே - பயந்த காரணம் பற்றியே; சடையன் என்னும் புகழோனைப் -
பயந்தமையே
- உரைப்பர் என்க; அறிஞர்கள் என்ற எழுவாய் தொக்கு நின்றது;
 
     நலம் - நன்மை - யானவைகளுட் சிறந்தவை; இவை சிவநெறி; நாம் விளங்கும்
படி
என்றது அந்நன்னெறி பற்ற உயிர்கள் உய்யும்படி; தவத்தின் குலம் - அடியார்
கூட்டம்; தவம் - சிவபூசை; தவத்தின் பலன் - சிவனையடையும் நெறியிற் சார்தல்;
இவை திருத்தொண்டத் தொகை யருளியமையால் உலகை வழிப்படுத்திய தன்மை
குறித்தன; “தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப் போதுவார்” (35) என்று
தொடக்கத்தில் ஆசிரியர் இதனைக் காட்டியருளியமை காண்க.
 
     சடைய நாயனாரது ஊரும், பெயரும், பண்பும், வரலாறும் தொகைநூல்
கூறியதனைத் தழுவி வகைநூல் வகுத்தது.
 
     விரி :- 4227. (இ-ள்) தம்பிராணை..... கொண்டருளி - தமது தலைவராகிய
சிவபெருமானையே தமக்குத் தோழராக ஆக்கிக்கொண்டருளி; தமது...எம்பிரானை -
(அவரையே) தமது பெரிய தோள்களைத் தழுவும் பூங்கொம்பர் போலும்
அம்மையாரிடத்துத் தூதாகச் செல்லும்படி ஏவிக் கொண்டருளும் எமது
பெருமானாராகிய வரை; சேரமான் பெருமான்...நம்பியாரூரை - சேரமான் பெருமான்
நாயனாரது ஒப்பற்ற துணைவராகிய நம்பியாரூரரை; ஞால மெல்லாம் குடிவாழ -
உலகத்தில் எல்லாவுயிர்களும் வாழ்வடையும் பொருட்டு; பயந்தார் - பெற்றனர்
(சடையனார்).
 
     (வி-ரை) தம்பிரானைத் தோழமை கொண்டருளி - தமக்கு மேலான
தலைவரைத் தமக்கு ஒப்பாந்தன்மையிற் றோழராகக் கொள்ளுதல் தகாதென்பது குறிப்பு.
 
     ஏவிக் கொண்டருளும் - இனி, அதனோடமையாது ஏவலையும் கொள்ளுதல்
அதன் மேலும் தகாது என்பதாம்; இனி, அதன்மேலும் “அவ்வேவல்” தானும்
கொம்பனார் பால் ஏவுதல் அதனினும் தகாது என்பதாம். இக்குறிப்புக்கள் படக்கூறியது
நிந்தைத்