துதியாகக்காட்டி அவரது இணையற்ற அன்பின் பெருமையையும் மேம்பாட்டையும் புலப்படுத்திய உட்குறிப்புப் பெறக் கூறியவாறாம். |
கொம்பனார் - பூங் கொம்புபோல்வார்; பரவையம்மையாரைக் குறித்தது. இனி, சங்கிலியார்பால் இறைவர் சென்றருளிய நிகழ்ச்சிகளும் ஒருவாற்றால் இதன் பாற் படுமென்க. “கொம்பருண்டேல்” (திருக்கோவை). |
எம்பிரான் - எமது பரமாசாரியர். |
சேரமான்....துணைவராம் - “சேரமான் றோழர்” என்னும் நாமமுடையார். 3812 - பார்க்க (கழறிற் - புரா. 66); இங்கு இவ்வாற்றாற்கூறி முடித்தது அடுத்து இருபெருமக்களும் ஒருசேரத் திருக்கயிலை செல்லும் சரிதக்குறிப்புக் காட்டுதற்கென்க. ஒரு தூது - ஒப்பற்றதூது. |
ஞாலக் குடி எல்லாம் வாழ என்க. குடி - உயிர்வருக்கம், “பூத பரம்பரைபொலிய” (1899); இவ்வாறன்றி ஞாலமெல்லாம் - உலகுயிர்கள் யாவும்; குடி - இறைவரருளிற்றிறம்பாது நிலைபெற்றுக் குடியாக; வாழ - வாழும்படி; என்றுரைப்பினுமமையும், ஞாலம் - இடவாகு பெயர்; குவலயத்தினலம் விளங்கும்படி.....குலம் விளங்கும்படி - என்ற வகைநூற் கருத்தை வடித்துக் காட்டியபடி. |
பயந்தார் - பயத்தல் - மகனாகப் பெறுதல்; சடையனார் என்னும் எழுவாய் அவாய் நிலையான் வந்தது. நம்பிகளைப் பெற்றளித்ததே இவர்தம் வரலாறும் என்பது; “உலகுய்ய மகப்பெற்றார்” (1951) என்பது முதலியவையும், சிவபாத விருதயர் மகப்பேறு வேண்டித் தவம்புரிந்த வரலாறும் (1917) கருதுக; “உலக முய்யத் திருவவதாரஞ் செய்தார்” (149) என்று தொடக்கத்துக் கூறியதனையும் நினைவுகூர்க. பயந்தமை - என்பது வகைநூல். |
இவ்வொரு பாட்டினாம் தடுத்தாட் கொண்ட வரலாறு முதலாக வெள்ளானை மேற் கயிலை சேரும்வரை உள்ள, நம்பிகள் சரித முழுதும் குறிப்பிற் காட்டி, அப்பெருமை முழுதும் அவரைப் பெற்று உலகுக்கீந்த இவர்பாலதாம் என்று இவரது பெருமையும் காட்டிய கவிநயம் கண்டுகொள்க. |
சரிதச்சுருக்கம் - சடையநாயனார் புராணம்; தம்பிரான் றோழராய் இறைவரைத் தூது கொண்டவரும் சேரமான் றோழருமாகிய நம்பியாரூரரை உலகுய்ய வரும் மகவாகப்பெற்றீந்த பெருமையுடையவர் சடையனாராகும். திருநாவலூரில் சிவமறையோர் குலத்தில் அவதரித்து அக்குலம் விளங்க வாழ்ந்தவர். |
கற்பனை ;- (1) இறைவரைத் தோழராகப் பெறுதலும் அவரைத் தூது கொள்ளுதலும் பேரன்பின் றிறத்தாலாவன. |
(2) இறைவர் தமது தலைமையினை எண்ணாது அன்பருக் கெளிய தோழரும் தூதருமாவர். |
(3) ஆரூர் நம்பிகள் சேரமானாரது தோழராந் தன்மை இறைவராற் கூட்டப் பட்டதாதலின் இணையற்றது. |
(4) தமக்கென்றன்றி உலகுய்யும்படி நன்மகப் பெறுதல் பெரியோர் திறம். |
தலவிசேடம். திருநாவலூர்;- முன் உரைக்கப்பட்டது; I - பக்கம் 258, பார்க்க. (பாட்டு - 224). சுக்கிரன் பூசித்த தலம்; சுவாமி - பக்தஜனேஸ்வரர்; அம்மை - மனோன்மணியம்மை எனவும் வழங்குவர்; நம்பியாரூரர் சந்நிதி கோயிலுள் வெளிச்சுற்றில் தென் கிழக்கில் உள்ளது; வரதராசப் பெருமாள் சந்நிதி கோயிலுக்குள் உள்ளும், அம்மை கோயிலின் முன்னும் உள்ளன; தலமரம் - நாவல்; மேற்புறம் கோமுகி தீர்த்தம் என்ற சிற்றோடையுண்டு; கோயிலுக்குத் தெற்கில் ? நாழிகை யளவில் கெடில நதி ஓடுகின்றது. |
70. சடைய நாயனார் புராணம் முற்றும் |