உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
71 . இசைஞானி யம்மையார் புராணம் _ _ _ _ _ |
தொகை |
| “என்னவனா மரனடியே யடைந்திட்ட சடையன் இசைஞானி காதலன் றிருநாவ லூர்க்கோன்” | |
- திருத்தொண்டத் தொகை - (11) |
வகை |
| பயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள் ளைப்பொள்ள னீள்பனைக்கைக் கயந்தா னுகைத்தநற் காளையை யென்றுங், கபாலங்கைக்கொண் டயந்தான் புகுமர னாரூர்ப் புனித வரன்றிருத்தாள் நயந்தா டனதுள்ளத் தென்று, முரைப்பது ஞானியையே” | |
- திருத்தொண்டர் திருவந்தாதி - (85) |
விரி |
4228. | ஒழியாப் பெருமைச் சடையனா ருரிமைச் செல்வத் திருமனையார் அழியாப் புரங்க ளெய்தழித்தா ராண்ட நம்பி தனைப்பயந்தார் இழியாக் குலத்தி னிசைஞானிப் பிராட்டி யாரை யென்சிறுபுன் மொழியாற் புகழ முடியுமோ முடியா தெவர்க்கு முடியாதால். 1 |
புராணம் ;- இசைஞானியம்மையாரது வரலாறும் பண்பும் கூறும் பகுதி. பன்னிரண்டாவது, மன்னியசீர்ச் சருக்கத்துள், ஆறாவது, இசைஞானியம்மையார் புராணங்கூறுகின்றார்; இசைஞானி - எடுத்துரைக்கப்படும் புகழ்களையுடைய ஞானி என்ற பெயருடையவர். |
தொகை ;- இசைஞானி யம்மையாருடைய மகனார் திரு நாவலூர்த் தலைவராகிய நம்பியாரூரர். |
வகை ;- பயந்தாள் கறுவுடை.....காளையை என்றும் - கறுவுதற் பண்பும், செங்கண்ணும், வெள்ளை நிறமும், துளையுடைய நீண்ட பனைபோன்ற கையும், ஆகிய இவற்றையுடைய யானையினை மேல்கொண்டு திருக்கயிலைக்குச் செலுத்திய காளையைப் பெற்றெடுத்தவ ரென்றும்; கபாலம்......உள்ளத்து என்றும் - பிரமகபாலத்தினைக் கையில் ஏந்திப் பலிஏற்கும் அரசனாரும், திருவாரூரில் எழுந்தருளிய புனிதரும், ஆகிய இறைவரது திருவடிகளைத் தன்னுள்ளத்து விரும்பி வைத்துள்ளவர் என்றும்; |