பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்552

 

     என்பது குறிப்பு. பயன் - பயம்; இழியாக்குலம் - சிவன்படைப்பில் வந்தமை
குறிப்பு; “தானெனை முன்படைத்தான்” (நம்பி).
 

     ஆண்ட - தடுத்தாட் கொண்டருளிய; பயந்தாரும் இழியாக்குலத்தில்
வந்தவருமாகிய இசை ஞானிப் பிராட்டியாரை என்க.
 
     என்.......முடியுமோ? - புகழ்தல் எனது சிறு சொல்லளவிற் படுமோ? படாது.
என்றபடி. எவர்க்கும் - எனக்கேயன்றி மற்று எவருக்கும் என்று இறந்தது தழுவிய
எச்சவும்மை.
 
     சரிதச்சுருக்கம் - இசைஞானியம்மையார் புராணம் ;- இசைஞானி யம்மையார்
உலவாத பெருமையினை யுடைய சடைய நாயனாரது உரிமைத் திருமனைவியார்; சைவ
முதல்வராகிய ஆளுடைய நம்பிகளைப் பெற்ற பெருமையினை உடையவர்; திருவாரூர்
இறைவரது திருவடிகளை என்றும் மறவாத மனமுடையவர். அவரது புகழ்களைக்
கூறுதல் எவராலும் இயலாது.
 
     கற்பனை :- (1) நன்மக்கட்பேறு இல்லறத்தின் நன்கலமாம்.
 
     (2) தமது இல்லறத்துக்கே யன்றி உலகமெல்லாம் உய்யச் செய்யவல்ல மகனாரைப்
பெறுதல் தாயர்செய்த பெருந்தவமும் புகழுமாம்.
 
     (3) அவ்வாறு பெற்ற தாயரைப் புகழ்தல் எவர்க்குமரிது.
 

71. இசைஞானி யம்மையார் புராணம் முற்றும்
_ _ _ _ _
 


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

சந்தரமூர்த்தி நாயனார் துதி
 

தொகை
 

அன்னவனா மாரூர னடிமைகேட் டுவப்பார்
ஆரூரி லம்மானுக் கன்பரா வாரே”

- திருத்தொண்டத்தொகை - (11)
 

வகை
 

ஞானவா ரூரரைச் சேரரை யல்லது நாமறியோம்
மானவ வாக்கை யொடும்புக் கவரை வளரொளிப்பூண்
வானவ ராலு மருவற் கரிய வடகயிலைக்
கோனவன் கோயிற் பெருந்தவத் தோர்தங்கள் கூட்டத்திலே (86)

_ _ _ _ _
 

     திருத்தொண்டத் தொகைத் தனியடியார்களும் தொகையடியார்களும்
 
கூட்டமொன் பானோ டறுபத்து மூன்று தனிப்பெயரா
யீட்டும் பெருந்தவத் தோரெழு பத்திரண் டாம்வினையை