பக்கம் எண் :

பெரியபுராணம்553

 

    

வாட்டுந் தவத்திருத் தொண்டத் தொகைபதி னொன்றின்வகைப்
பாட்டுந் திகழ்திரு நாவலூ ராளி பணித்தனனே (87)
 
திருத்தொண்டத்தொகைப் பாட்டு முதற்குறிப்பு
 
     பணித்தநற் றொண்டத் தொகைமுதற் றில்லை யிலைமலிந்த
வணித்திகழ் மும்மைத் திருநின்ற வம்பறா வார்கொண்டதோர்
இணைத்திகழ் பொய்யடி மைக்கறைக் கண்டன் கடல்சூழ்ந்தபின்
மணித்திகழ் சொற்பத்தர் மன்னிய சீர்மறை நாவனொடே       (88)
 
பலனருள் கவி
 
     ஓடிடும் பஞ்சேந் திரிய மொடுக்கியென் னுள்வினைகள்
வாடிடும் வண்ணநின் றெத்தவஞ் செய்தனன் வானினுள்ளோர்
சூடிடுஞ் சீர்த்திருப் பாதத்தர் தொண்டத் தொகையிலுள்ள
சேடர்தஞ் செல்வப் பெரும்புக ழந்தாதி செப்பிடவே          (89)

     - திருத்தொண்டர் திருவந்தாதி. (முற்றிற்று)
 

விரி
 

     மேல்வரும் வெள்ளானைச் சருக்க முழுமையும் 86 - ம் திருப்பாட்டின் விரியாகக்
கொள்ளத்தக்கது; இச் சருக்க முடிவின் பொருட்டும், ஆசிரியர், காவிய நிலைபற்றித்
தொடக்கத்துத் திருமலைச் சருக்கமும் இறுதியில் வெள்ளானைச் சருக்கமும் வைத்து
முடித்ததன்பொருட்டும், அதனை ஈண்டு வைக்காது வேறுவைத்து உரை
ஓதப்படுகின்றது.
 
     தொகை ;- அத்தன்மையுடைய ஆரூரனது அடிமைத் திறத்தினைக் கேட்டு
மகிழ்ந்து வாழ்பவர்கள் திருவாரூரில் அம்மானுக்கு அன்புடையவராகுவர்.
 
     அன்னவன் - முன்கூறிய அந்த என முன்னறி சுட்டு; அத்தன்மையாவன
தில்லைவாழந்தணர் முதலாகத் திருநீலகண்டப் பாணனா ரீறாகக் கூறி வழிபடப்பட்ட
திருத்தொண்டர்களுக்கெல்லாம் அடியவராய்ச், சடையனா ரிசைஞானியார் காதலராகிய
தன்மை; அடிமை - அடிமை செய்யும் பண்பு; மனமொழி மெய்களால் வழிபட்டமுறை;
அது தடுத்தாட்கொண்ட புராணத்துட் கூறப்பட்டது. (335 - 349); அடிமைத் திறங்கூறும்
திருத்தொண்டத் தொகை; உவத்தல் - மகிழ்ந்து அவ்வாறே தாமும் அடியார்க்கு
அடிமைகளாக ஒழுக அமைதல்; அன்பராவார் - சிவனுக்கு அன்பராந்தன்மை பெற்று
வீடடையும் தகுதிபெறுவர். சிவனடியார்பாற் செலுத்தும் மனமே சிவன்பாலன்பினை
விளைத்து அதுவே முத்தி சாதனமாம் என்பது சிவஞான நூல்களின் துணிவு; ஏகாரம் -
தேற்றம். அம்மான் - இறைவர்.
 
     வகை :- (86) வளரொளிப்பூண்.....கூட்டத்திலே - மேன்மேல் வளர்கின்ற
ஒளியுடைய அணிகளையுடைய தேவர்களாலும் சென்றடைதற்கரிய வடகயிலை
மலையின்கண் எழுந்தருளியுள்ள முழுமுதற் றலைவராகிய சிவபெருமானது
திருக்கோயிலில் உள்ள அடியார் திருக்கூட்டத்தில்; மானவ.......புக்கவரை - மனித
உடம்புடன் கூடிப்புகுந்திருப்பவர்களை; ஞான.....நாமறியோம் - ஞானத்திரு
நம்பியாரூரரையும் சேரமான் பெருமாள் நாயனாரையும் அல்லாது வேறு எவரையும்
நாம் அறியோம்.