பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்554

 
     ஞான ஆரூரர் - ஞானத்தையுடைய நம்பி ஆரூரர். ஞானம் - சிவஞானம்;
இங்குச் சிவஞான வாழ்வுடைமை குறித்தது; ஆரூரையும் சேரரையும் என்க.
எண்ணும்மைகள் தொக்கன; சேரர் - சேரமான் பெருமாள்; மானவ ஆக்கை - மனித
உடம்பு; தவத்தோர் - அடியார்; சிவகணங்களாகிக் கயிலையில் இருப்பவர்; கயிலைக்
கோன் - சிவபெருமான்; கூட்டம் - கயிலையின் திருக் கூட்டம்; சிவகணங்களின்
கூட்டம்; இவ்விரு பெருமக்களும் இங்கு நின்றவாறே மனித உடம்புடன் முறையே
யானைமீதும் குதிரைமீதும் திருக்கயிலைக்குச் சென்று சேர்ந்து அங்குக் கணநாதர்களாய்
அடியார் கூட்டத்தினில் அமரும் வரலாறு மேல் வெள்ளானைச் சருக்கத்துட்
பேசப்பெறும்; அச்சருக்கத்தை வேறாக வகுத்து இப் புராண காவியத்தை
நிறைவாக்குதற்கு ஆதரவு நம்பியாண்டார் நம்பிகளருளிய இத்திருப்பாட்டேயாகும்
என்க; வானவராலும் மருவற்கரிய - வானவர் பசுபுண்ணியங்கள் செய்து போக
பூமியாகிய, மீண்டும் பிறவிக் கேதுவாகிய, சுவர்க்கத்திற் புக உரியவரேயன்றிச்,
சிவனடியார் போலச் சிவபுண்ணியப் பேற்றினாற் பிறவா நெறி பெற்றுச் சிவனுலகம் புக
உரியரல்லர் என்பது ஞானநூற் றுணிபு; கோன் - முழுமுதற்றலைவர்; இப்பாட்டின்
விரிவு மேல்வருஞ் சருக்கமாம்.
 
     (87) இப்பாட்டினால் திருத்தொண்டத் தொகையினுள் தனியடியார்களும்
தொகையடியார்களும் இத்துணையாவர் என்று நம்பியாண்டார் நம்பிகள் வகுத்துக்
காட்டியருளினர்; கூட்டமொன்பானோடு.....எழுபத்திரண்டாம் - திருக்கூட்டத்தின் வரும்
அடியார்களின் வகை ஒன்பதாம்; (அதனோடு), அறுபத்து மூன்றுபேர் தனியடியார்களாக,
இவ்வாறு பெருந்தவத்தினை ஈட்டும் அடியார்கள் எழுபத்திரண்டாவர் (என்று);
திகழ்திரு நாவலூராளி - விளங்கும் திருநாவலூர் நம்பியானவர்; வினையை....பாட்டும் -
வினையைப் போக்கும் தவத்தை தரும் திருத்தொண்டத் தொகையினிற் பதினொன்றாக
வகுத்த பாட்டுக்களையும்; பணித்தனனே - அமைவுபடுத்தினரே;
 

     கூட்டமொன்பானோடு - திருக்கூட்டம் - தொகையடியார்களாகப்
போற்றப்படும் ஒன்பதனோடு; இவர்கள் தில்லைவாழந்தணர்கள், பொய்யடிமையில்லாத
புலவர், “பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்குமடியேன்” என்ற திருப்பாட்டிற்
போற்றப்பட்ட ஏழு திறத்தினர் ஆக ஒன்பதினமர். தனிப்பெயர் அறுபத்து மூன்று -
திருநீலகண்டக் குயவனார் முதலாகத் திருநீலகண்ட யாழ்ப்பாண ரீறாகத் தனித்தனி
அடியேன் என்று போற்றப்பட்ட அறுபதின்மருடன், அரனடியே அடைந்திட்ட
சடையன் (1), இசைஞானி (2), காதலன் றிருநாவலூர்க்கோ னன்னவனா மாரூரன் (3)
என்ற மூவரும் சேர்த்து அறுபத்து மூவராவர்; ஈட்டும் பெருந்தவத்தோர் - மீட்டிய
பெருந்தவத்தவர்கள்; தவம் - சிவபூசைப்பயன்; வினையை....திருத்தொண்டத்
தொகை
- திருத்தொண்டத் தொகையின் பயனாவது வினையை வீட்டுகின்ற
தவநெறியிற் செலுத்துவதாம். வகைப்பாட்டும் - வகைப்படுத்தி ஓதியபாட்டுக்களையும்;
திருநாவலூராளி - நம்பியாரூரர்.
 

     (88) இப்பாட்டினால் திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தை நியமமாகப்
பாராயணஞ் செய்வோர்க்கு அத்திருப்பாட்டுக்கள் முறை பிறழாது நினைவுக்கு வருதற்கு
உதவியாக அவற்றின் முதற் குறிப்புக்களைக் கோர்த்து ஒரு கவியாக்கிக்
கருணையினாலே தந்தருளினார் நம்பியாண்டார் நம்பிகள். இம்மரபு பிறபதிகங்களுக்கும்
தேவாரப் பள்ளிக்கூடங்களில் கையாளப்படுகின்றது.
 
     பணித்த நற்றொண்டத்தொகை முதல் - முன்கூறிய அவ்வாறு திருநாவலூராளி
அருளிய வினைவீட்டும் தவத் திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகப் பாட்டுக்களின்