பக்கம் எண் :

வெள்ளானைச் சருக்கம்560

 

     திருப்புக்கொளியூர் - இப்பதி திருப்புக்கொளியூர் அவிநாசி என வழங்குவது.
பதிகம் பார்க்க. அவிநாசி என்றே உலகில் விளங்க வழங்கப்படும். புக்கொளியூர் -
பெயர்க்காரணம்பற்றித் தலவிசேடம் பார்க்க.
 

     செல்வம் - அருட் செல்வம்; தல அம்மை, கருணாம்பிகை என்று வழங்கப்படும்
காரணப் பெயருடையராதலும் குறிப்பு.                                  4
 
4233.    மறையோர் வாழு மப்பதியின் மாட வீதி மருங்கணைவார்
நிறையுஞ் செல்வத் தெதிர்மனைக ளிரண்டி, நிகழ்மங் கலவியங்கள்
அறையு மொலியொன் றினி,லொன்றி லழுகையொலி, வந்தெழுதலு,
மாங்குறையு மறையோர் களை, “யிரண்டு முடனே நிகழ்வதென்?”னென்றார்.
 
     (இ-ள்) மறையோர்...அணைவார் - அப்பதியில் வேதியர்கள் வாழும்
மாடவீதியின் பக்கத்தில் அணைவாராகிய நம்பிகள்; நிறையும்...இரண்டில் - நிறையும்
செல்வத்துடன் எதிர் எதிராயமைந்த இரண்டுமனைகளில்; நிகழ்....எழுதலும் - ஒரு
மனையில் நிகழும் மங்கலத் தொழில்களுக்கான இயங்களின் ஒலியும், மற்றொன்றில்
அழுகை ஒலியும் வந்து எழுதலும் (அவற்றைக் கேட்டு); ஆங்கு.....என்றார் - அங்கு
உறைகின்ற வேதியர்களை நோக்கி, மாறுபட்ட இவ்விரண்டு ஒலிகளும் ஒரே காலத்தில்
நிகழ்வதற்கு என்ன காரணம்? என்று கேட்டருளினார்.
 
     (வி-ரை) இத்திருப்பாட்டும், மேல்வரும் பாட்டும் கதை சொல்லும் உரைநடைப்
போக்கில் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் கொண்ட செம்பாகமான இனிய
நடையில் அமைந்துள்ளமை கண்டுகளிக்கத்தக்கது. இவ்வாறு நேர்நின்று பேசுதல்போலச்
சரிதம் கூறிப்போதல் ஆசிரியரின் சிறப்பான கவி அருமைப்பாடுகளுள் ஒன்று.
ஆளுடையபிள்ளையார் புராணத்துள் திருமருகல் நிகழ்ச்சி கூறும் பாட்டுக்களையும்
பார்க்க. இதனை ஆங்கிலத்தில் சரிதம் கூறல் - Narration - என்றதொரு அழகு என
வகுப்பார்.1
 
     அப்பதியில் மறையோர் வாழும் மாடவீதி - என்க. அப்பதி சேய்ஞலூர்
முதலியவைபோல் முற்றும் மறையவர் பதியன்றாதல் கருதி இவ்வாறுரைக்கப்பட்டது.
இவ்வீதி, இப்போது தெற்கில் வஞ்சிப்பாளையம் என்ற இருப்புப்பாதை
நிலையத்தினின்றும், அவிநாசிக்கு வரும் வழியில் அமைந்திருந்தது; புக்கொளியூர்
என்னும் நகரம் திருக்கோயிலுக்குத் தென்புறம் பாசனக்குளத்தின் தெற்கில் அமைந்த
நிலப்பரப்பில் இருந்ததென்பதும், பின்னர்க் காலாந்தரத்தில் அழிந்துபட்டதென்பதும்,
நாட்டு நடப்புச் சரித ஆதரவுகளாலும், அரசாங்க நிலக்கணக்குப் பதிவு
முதலியவற்றாலும் அறியப்படுகின்றன. நகரமிருந்து அழிந்துபட்ட அடையாளங்கள்
இப்போது இந்நிலப்பரப்பிற் காணலாம்; “புக்கொளியூர் மடம்” என்ற பழயது ஒரு
அறநிலயமும், பெயர் வழக்கும் இதற்குச் சான்று பகர்கின்றன. இவ்வழியாய் வரும்போது
தான் நம்பிகள் இப்பாட்டிற் கூறியவாறு நிகழ்ச்சிகளைக் கண்டு கேட்டனர் என்பது
கருதப்படுகின்றது. சோழநாட்டினின்றும் மலைநாட்டுக்குச் செல்வோர்
திருவீங்கோய்மலை அருகு காவிரியைத் தாண்டித், திருப்பாண்டிக் கொடுமுடியின்
வழியேவந்து, திருமுருகன்பூண்டி திருப்புக்கொளியூர் வழியாக மேற்கு நோக்கிச்
செல்லும் ஒரு பழஞ்சாலை வழி முன்னாளில் இருந்தது என்பதும் அறியப்படும்.
இதுபற்றி, முன், “காரூரு மலைநாடு கடந்தருளிக் கற்சுரமு, நீரூருங் கான்யாறு
நெடுங்கானும் பலகழியச், சீரூ
____________________
 
     1 இதுபற்றி எனது சேக்கிழார் பக்கங்கள் 143 - 146 பார்க்க.