உடைய சேரமான் பெருமானார்; எதிர் சென்று......பணிய - எதிர் கொண்டு சென்று, அன்றலர்ந்த தாமரை மலர் போன்ற பாதங்களை வணங்க; தாவில்..கலந்தனர் - கேட்டினை நீக்கும் அமுதமயமாகிய பல கலைகளையும் நாட்டும் நம்பியாரூரரும் எதிர் தொழுது கலந்தனர்; (ஆல் - அசை). |
(வி-ரை) மலை நாட்டு எல்லையுட் புகுதவந்த - மலநாட்டின் எல்லை வரையிலும் சென்று சேரலனார் எதிர் கொண்டனர் என்பதாம். |
வரையில் சிலைநாட்டிய - வரை - மேரு; சிலை - வில்; சிலை நாட்டுதல் - மேருமலை வரையில் செயித்து அதனுச்சியில் தமது விற்கொடியினைப் பொறித்தல். |
தலைநாட் கமலப் போது - அன்று காலை யலர்ந்த தாமரை மலர். |
தாவில்பல கலை நாட்டு - தாவில் - கேட்டினை யில்லையாகச் செய்யும்; கலை நாட்டு கலைகளையும் தாபிக்கும்; பால கலைகளுக்கும் இருப்பிடமாகிய திருப்பதிகங்களை அருளும் என்பதாம். நம்பிகளது பல பதிகங்களின் பயன் விளைந்தமையும் காண்க. |
அமுதம் - பிறவிப்பிணி போக்கும்; முதலை வாய்ப்பிள்ளை யழைத்த வரலாற்றுக் குறிப்பு. கலைகள் உணர்த்தும் சீவன் முத்தராகிய என்றலுமாம். |
தாமும் - சேரனார் பணிந்தது போலத் தாமும் தொழுது என்று உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. |
கலந்தனர் - கூடிக் கிடைத்தனர்; கூடினர். 19 |
| 4248. | சிந்தை மகிழுஞ் சேரலனார் திருவா ரூர ரெனுமிவர்கள் தந்த மணிமே னிகள்வேறா மெனினு மொன்றாந் தன்மையராய் முந்த வெழுங்கா தலிற்றொழுது முயங்கி யுதியர் முதல்வேந்தர் எந்தை பெருமான் றிருவாரூர்ச் செல்வம் வினவி யின்புற்றார். 20 |
(இ-ள்) சிந்தை ....தன்மையராய் - (முன் கூறியவாறு கூடி) மன மகிழும் சேரமானாரும் திருவாரூர் நம்பிகளும் என்னும் இவ்விருவருடைய அழகிய மேனிகள் வேறா யிருந்தும், ஒன்றே யாகும் தன்மை யுடையவர்களாய்; முந்த.....முயங்கி - முற்பட்டு எழுகின்ற பெரு விருப்பத்தினாலே தொழுது தழுவிக் கொண்ட பின்; உதியர்.....இன்புற்றார் - சேரர் குலத்து வந்த முதன்மை பெற்ற அரசராகிய சேரமானார் எமது பெருமானாரது திருவாரூரின் சிறப்புடைய நன்மைகளைக் கேட்டு இன்ப முற்றனர். |
(வி-ரை) சிந்தை...இவர்கள் - முன் கூறியவாறு கலந்ததனால் இருபாலும் மகிழவந்த இருவர்களும். |
மணிமேனிகள்....முயங்கி - பெரு விருப்பத்தாற் றழுவிக் கொண்டமையால் இருவரது மணிமேனிகள் வேறு வேறாக இரண்டாயினும் ஒரே மேனியாக எண்ணக் கூடிய தன்மை பெற்றன என்பது. முயங்குதல் - தழுவிக் கொள்ளுதல்; முந்த - ஒருவர் ஒருவரை முற்பட்டு; முன்னரும் “ முன்பு பணிந்த பெருமாளைத் தாமும் பணிந்து முகந்தெடுத்தே, யன்பு பெருகத் தழுவவிரைந் தவரு மார்வத் தொடுதழுவ, வின்ப வெள்ளத் திடைநின்று மேற மாட்டா தலைவார்போல், என்பு முருகியுயிரொன்றி யுடம்பு மொன்றா மெனவிசைந்தார்” (3812) என்று இந்நிலையின் தன்மையை விரித்துக் கூறியது காண்க; இவ்வாறு தழுவிக் கொள்ளுதல் அரசர், பெரியோர் முதலியோர்களிடையில் இன்றும் நிகழும் மரபு. |
| உதியர் - சேரர்கள். |