சேரலனாருடனே கூட அணைந்து பணிந்துதுதித்து; பொன்நெடும்..புகுந்தனர் - பொன்புனைந்த நீண்ட பெரிய மதில் சூழ்ந்த மகோதை நகரினுள்ளே வந்து புகுந்தருளினர். |
(வி-ரை) இன்னதன்மை - முன்பாட்டிற் கூறியவாறு உபசரிக்கப்பட்ட நிலை. |
இடர்கெட - ஏத்தி - என்றது இந்த இரண்டு பெருமக்களும் மலைநாட்டுப் பதிகளைச் சென்று பணிந்து ஏத்தியதனால் உலகம் இடர் நீங்கி உய்தி பெற்றது என்றதாம். “மாத வஞ்செய்த தென்றிசை வாழ்ந்திடப் - போதுவார்” (35) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க; உலக முய்ந்திட என்க. இவர்களுடைய பாவனை நோக்கம் முதலியவற்றால் வரும் நன்மைகளாற் றுன்ப நீங்க என்பதாம். |
மலை........பதிபல - இவை திருச்சிவப்பேரூர் விடைக்குன்று நாதேச்சரம் (திருச்சூர் - Trichur எனப் பிழைபட மருவி வழங்குவது); வைக்கம் (கரன் பூசித்தது); திருச்செங்குன்றூர் (விறன்மிண்ட நாயனாரது பதி); சுசீந்திரம் (திருவிதாங்கூர் சீமை ) முதலாயின என்பது கருதப்படும். |
உடன் - சேரலனாருடன் கூடி. விரைவாக - அன்புடனே - என்றலுமாம். |
மகோதை - சேர அரசர் தலைநகர், அஞ்சைக்களம் - கொடுங்கோளூர்; “மகோதை யணியார் பொழி லஞ்சைக் களம்” (தேவா) (3751) பார்க்க. |
வன்றொன்டர் ஏத்திப் புகுந்தனர் - என்க. சேரலனார் நம்பிகளைப் பின்பற்றி நீங்கா நிழல்போல உடன் சென்றமையால் சிறப்புப்பற்றி வன்றொண்டர் புகுந்தனர் என அவரொருவரது தொழிலாக உரைத்தருளினர். உடன் - ஏத்திப் - புகுந்தனர். 27 |
| 4256. | ஆய செய்கையி னாள்பல கழிந்தபி னரசர்கண் முதற்சேரர் தூய மஞ்சனத் தொழிலினிற் றொடங்கிடத் துணைவராம் வன்றொண்டர் பாய கங்கைசூழ் நெடஞ்சடைப் பரமரைப் பண்டுதாம் பிரிந்தெய்துஞ் சேய நன்னெறி குறுகிடக் குறுகினார் திருவஞ்சைக் களந்தன்னில். 28 |
(இ-ள்) ஆய...பின் - முன் கூறியவாறு ஆகிய செயலிலே பல நாட்கள் கழிந்தபின் (ஒரு நாள்); அரசர்கள்......தொடங்கி - (முடியுடை மூவேந்தர்களுள்) முதலில் வைத்தெண்ணப்படும் சேரலனார் தூய திருமஞ்சனம் செய்தருளும் தொழிலில் தொடங்கியிட; துணைவராம் வன்றொண்டர் - அரவது தோழனாராகிய வன்றொண்டர்; பாய...குறுகிட - பரவிய கங்கையினைச் சூழ்ந்து முடித்த நீண்ட சடையினையுடைய சிவபெருமானை முன்னை நிலையிற் றாம் பிரிந்து போந்து இவ்வுலகில் வந்த தூரமாகிய நல்ல நெறியானது முடியும் எல்லை வர; திருவஞ்சைக்களந்தன்னிற் குறுகினார் - திருவஞ்சைக்களத்தில் அணைந்தனர். |
(வி-ரை) ஆய - முன் பாட்டிற் கூறியவாறு ஆகிய; ஆய - ஆக்கமுடைய என்ற குறிப்புமாம். |
கழிந்த பின் - கழிந்த பின்னர் ஒருநாள்; ஒருநாள் என்பது இசையெச்சம். |
அரசர்கள் முதற் சேரர் - மூவேந்தர்களை எண்ணும்போது சேர சோழ பாண்டியர் என்று முறைப்படுத்தி முதலிற் சொல்லவரும் சேரர்; இவ்வாறன்றி அரசர்களுள் மேம்பட்ட என்றலுமாம். |
மஞ்சனத் தொழில் - நீராடும் செயல். |
மஞ்சனத் தொழில் தொடங்கிட வன்றொண்டர் திருவஞ்சைக்களத்தன்னில் - குறுகினார் - என்க; பதிவழிபாட்டு நிலைகளின்போது முன்னரெல்லாம் சேரனார் |