பக்கம் எண் :

பெரியபுராணம்589

 
தினையுடைய இறைவர்; தம் கயிலையில்....கூட - தமது திருக்கயிலையில் சிவகணத்த
வர்களுடன் கூட இருக்கும்படி; தடுத்த....முடிந்திட - முன்னர்த் தடுத்து உலகில்
அவதரிக்கும்படி ஆணையிட்ட செய்கையின் அளவு தீர்ந்திட; தங்கழல்....அளிக்கின்றார்
- தமது திருவடிச் சார்பினைத் தந்தருள்கின்றாராகி.                        30
     
     4259. (இ-ள்) மன்றல்.....பொழுதின் கண் - மணமுடைய அழகிய மரங்கள்
நெருங்கிய பூங்கயிலாயத்தில் மலைவல்லியாருடனே கூட வெற்றி பொருந்திய வெள்ளிய
இடபத்தின் பாகர் எழுந்தருளியிருந்த பொழுது; ஒன்று.....அருள்செய்தார் - நம்முடன்
ஒன்றித்த சிந்தையினை யுடைய நமது நம்பியாரூரனைத் தேவருடைய
வெள்ளானையுடன் சென்று அதன் மீது ஏற்றிக் கொண்டு இங்கு வாருங்கள் என்று
பிரமன் முதலாகிய தேவர்களுக்குக் கட்டளை யிட்டருளிச் செய்தார்.          31
    
 
     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
 
     4258. (வி-ரை) உட்குறிப்பு - பதிகம் பாடும் திருவுள்ளக் குறிப்பு. கருதிய
பொருள்; உட்கிடையாகிய விண்ணப்பம்.
 
     உலகினில் பாசம் - உலகில் வருதற் கேதுவாகிய தொடக்கு; அடுத்த -
பாசத்தால் பொருந்திய;
 
     கணத்தவருடன் கூடக் - கழற் சார்புதந்து - கூடுதற் கேதுவாகிய
திருவடிச்சார்பு.
 
     தடுத்த செய்கை - முன்கணத்தவருடன் கூடியிருந்ததனைத் தடுத்த ஆணை;
“மாதர் மேன்மனம் வைத்தனை தென்புவி, மீது தோன்றி....அணைவாய்” (37)என்ற
செய்கை; முடிந்திடுதல் - எல்லையறுதல்; “குறுகிட” (4256) என்ற கருத்து; முடிந்திட -
முடிந்திடுதலால்.
 
     கழற்சார்பு - கழலை நீங்காது சார்ந்திருக்கும் நிலை; அளிக்கின்றார் -
முற்றெச்சம். அளிக்கின்றாராகிப் - பொழுதின்கண் - அருள்செய்தார் - என
மேல்வரும் பாட்டுடன் முடிக்க.
 
     4259. (வி-ரை) பொழுதின் கண் - விடையின்மீது மலைவல்லியுடன் கூட
இருந்து அருள் செய்தார். இஃது அடியார்களுக் கருளும் நிலை.
     ஒன்று சிந்தை - சிவராச யோகத்தால் இரண்டற்றுத் தம்மையே மனத்துட்
கொண்ட நிலை “ஒன்றியிருந்து நினைமின்கள்” (தேவா); “காதலாற் பெருகன்பு புரியு
முள்ளத்தார்” (4259).
 
     உம்பர் வெள்ளானை - தேவருலகத்துள்ள வெள்ளையானை; இந்திரனது
ஐராவதம் என்பது. அதுவன்று, கயிலையிலுள்ள ஐராவணம் என்பாருமுண்டு. ஊரன் -
நம்பியாரூரன். உம்பர் - உவ்விடத்துள்ள என்றலுமாம்.
 
     உடன் ஏற்றிக்கொண்டு - உடன் சென்று அதன் மிசை ஏற்றிக்கொண்டு; சென்று
அதன் மிசை என்பது இசை எச்சம்.
 
     கொண்டுவாரும் - அழைத்துக்கொண்டு வாருங்கள்.
 
     அருள் செய்தல் - கட்டளை யிடுதல்.                           31
 
     திருவஞ்சைக்களம்.
 
திருச்சிற்றம்பலம்                பண் - இந்தளம்
 
தலைக்குத் தலைமாலை யணிந்த தென்னே
    சடைமேற் கங்கைவெள்ளந் தரித்த தென்னே
அலைக்கும் புலித்தோல்கொண் டசைத்த தென்னே
    யதன்மேற் கதநாகக்கச் சார்த்த தென்னே