பக்கம் எண் :

வெள்ளானைச் சருக்கம்590

 
மலைக்குந் நிகரொப் பனவன் றிரைகள்
    வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
டலைக்குங் கடலங் கரைமேன் மகோதை
    யணியார் பொழிலஞ் சைக்களத் தப்பனே.       (1)
 
வெறுத்தேன் மனைவாழ்க் கையைவிட் டொழிந்தேன்
   
விளங்கும் குழைக்கா துடைவே தியனே
இறுத்தா யிலங்கைக் கிறையா யவனைத்
    தலைபத் தொடுதோள் பலவிற் றுவிழக்
கறுத்தாய் கடனஞ் சமுதுண்டு கண்டங்
    கடுகப் பிரமன் றலையைந் திலுமொன்
றறுத்தாய் கடலங் கரைமேன் மகோதை
    யணியார் பொழிலஞ் சைக்களத் தப்பனே.         (8)
 
எந்தம் மடிக ளிமையோர் பெருமா
    னெனக்கென் றுமளிக் குமணி மிடற்றன்
அந்தண் கடலங் கரைமேன் மகோதை
    யணியார் பொழிலஞ் சைக்களத் தப்பனை
மந்தம் முழவு குழலும் மியம்பும்
    வளர்நா வலர்கோ னம்பியூ ரன்சொன்ன
சந்தம் மிகுதண் டமிழ்மா லைகள்கொண்
    டடிவீழ வல்லார் தடுமாற் றிலரே.                (10)

திருச்சிற்றம்பலம்
 

     பதிகக் குறிப்பு;- “அத்திருப்பதிகத்தினுட் குறிப்பு, இவ்வுலகினிற் பாசம் அடுத்த
வாழ்க்கையை அறுத்திட வேண்டும்” என்று விண்ணப்பித்து என்பது ஆசிரியர்
காட்டியவாறு (4258)
 
     பதிகப் பாட்டுக் குறிப்பு;- குறிப்பு; “என்னே?” என்று இப்பாட்டிலும்
மேல்வரும் 2-5-6லும் வரும் வினாக்கள் இறைவரது தன்மைகளை எடுத்துப்
பன்னிக்கூறி, இறைவரையே முன்னிலைப்படுத்தி, அறியார்போன்று வினாவுதல்
குறித்தன. ஆளுடைய பிள்ளையாரது திருவலஞ்சுழி - பண் இந்தளம் - “விண்டெலா
மலர” என்ற வினாவுரைத் திருப்பதிகம் பார்க்க; இவ்வாறே இறைவரது புகழ்களை
எடுத்துக்கூறி, “அருத்த னைத்திற மடியர் பால்மிகக் கேட்டு கந்த வினாவுரை” யாக
அமைந்த, ஆளுடைய பிள்ளையாரது, பண் - கொல்லி - திருக்கண்டியூர்த்
திருப்பதிகமும், ஆளுடைய அரசுகளது திருவினாத் திருத்தாண்டகத் திருப்பதிகமும்,
பிறவும் இங்குக் கருதி ஒப்பு நோக்கற்பாலன. அவை அடியாரை முன்னிலைப் படுத்தி
வினவியவாற்றால் அமைந்தன.- (1) தலைக்குத் தலைமாலை - தலைக்கணியாக;
“தலைமாலை தலைக்கணிந்து” (அரசு - அங்கமாலை), இஃது திருவஞ்சைக் களத்தப்
பரது சிவக்குறியிற் காணும் சிறப்பாகிய அடையாளம்; சிவமூல லிங்கத்தின்
திருமுடியின்மேல் பின்னும் ஒருபுறம் புடைப்பாகிய தொரு திருவடையாளங் கூர்ந்து
நோக்கினாற் காணலாம்; அதனையே தலைக்கு தலைமாலை என்றருளியபடி; முன்னர்
இத்தலத்திற் பாடியருளியதாக, ஆசிரியர் அறிவிக்க நாம் அறியும், மற்றொரு பதிகத்துள்
“முடிப்பது கங்கை” என்ற கூறிய கருத்தும் இது. மேல் “சடைமேற்