பக்கம் எண் :

பெரியபுராணம்591

 
கங்கை வெள்ளந் தரித்ததென்னே?" என்பதும் முன் பதிகக் கருத்தும் இதுவேயாதலை
விளக்குவது; அசைத்தது - உடையாகக் கட்டியது; கச்சு - உடையினை நெகிழ
விடாமல் மேற்கட்டும் உடைவகை; அதன் மேல் என்றது காண்க; வலித்தெற்றி -
மிக்க ஆர்ப்புடன் மோதி; வலம்புரி - சங்கு; கடல்படு பண்டம்; அலைத்தல் -
வீசிப்பரவுதல்; கடலங் கரைமேல் - மகோதை கடற்கரையில் உள்ள பட்டினம்; உததி
- கடல்; அஞ்சைக்களம் - மகோதையின் தொடர்புடைய ஒரு பகுதி அஞ்சைக்களம்
என்பது; அஞ்சைக்களத் தப்பன் - தலச்சுவாமி பெயர்; திருகயிலாயபதிக்கு வேறு
பெயரின்றித் தலத்தினை ஒட்டி அதன் பதி - (அப்பன்) என்று வழங்குதல்போல்
இங்கும் தலத்தினை ஒட்டி அதன் "அப்பன்" என வழங்கும் சிறப்புக் காண்க.
அம்மையும் "உமை" எனப்படுதலுங் காண்க; அணியார் பொழில் - இச்சிறப்பும்
கடற்கரைச் சிறப்பும் இன்றுங் காண உள்ளது; கடல் - மேல்கடல்; அங்கரை -
கரையின் அழகிய அமைதி குறித்தது.-(2) பொடி - திருநீறு; புகர் ஏறு - ஒளியும்
அழகுமுள்ள இடபம்; மடித்து ஓட்டந்து - உயர்ந்து சுருண்டு ஓடி; ஓட்டந்தந்து
என்றது ஓட்டந்து என நின்றது; சங்கம் அங்காந்து முத்தஞ் சொரிய - சங்குகள்
வாய்திறந்து முத்துக்களைச் சொரிய;-(3) நெல்லிக்கனி - "அங்கையி னெல்லிக்
கனியெனக் காயினன்" (திருவா); "கரத லாமல கக்கனி யொக்குமே" (குறுந்); கையிலேந்தி
நோக்க உள்ளிருக்கும் விதையின் வரைகளை வெளியில் நெல்லிக்கனி வரைகளாற்
தெளியக் காட்டுதல் போலச் சிந்தித்தெழுவார்க்கு வெளிப்படக் காணப்படுபவன்;
சிறியார் - பெரியார் - சிறியாராயினும் பெரியாராயினும்; மனத்தேறலுறுதல் -
மனத்துள் இடைவிடாது தெளிய வைத்தல்; முந்தி - முற்பட்டு; சிறியார்....பிறவார் -
சிறியாரேனும் பெரியாரேனும் மனத்துள் ஏறவைத்தாராயின் முற்படத் தொழுவார்கள்;
அதனால் அவர்கள் இறவார்; இறந்தாராயினும் இனிப்பிறவார்; இப்போது பிறப்பு
நேர்ந்துவிட்டதாதலின் அடுத்துவரும் இறப்பு நிகழாது என்ற குறிப்புத்தர இறவார்
என்பதனை முதலில் வைத்தார். ஒருவேளை இறப்பு நிகழினும் இனிப்பிறவார்
என்பதாம்; இறவாதிருத்தலாவது சீவன் முத்தராய் நிலைத்தல்; இனிமேல் நிகழும் சரித
வரலாற்றின் படி நம்பிகளும் சேரனாரும் இறவாதிருக்கப் பெறும் நிலைகளைக் கருதுக;
முனிகள் - முனிகளுக்கு; சந்தி....வரை - மலைகள் கூடுமிடம்; தணியாமையாவது
பேரலைகள் கரையிற் சேர்ந்து மோதும்போது ஏனைக்கரைகளிற் போல உயரமும்
விசையும் குறையாமை. அந்தித்தலை - தலை - ஏழனுருபு; அந்தியின் கண்; வானே
- ஏகாரம் தேற்றம்; மேல்வரும் பாட்டில் வரும் உயிரே - இலையே - உளையே -
புயலே - குடியே - என்ற ஏகாரங்களு மிவ்வாறே கொள்க;-(4) இழைக்கும் -
ஒலிக்கும்
; இழைத்தல் - செய்தல்; இங்கு ஒலித்தல் செய்யும் என்க; வரைதலுமாம்;
உயிரே - இங்கு உயிர்களுள்ளும் உயிர் எழுத்தாய் நிற்கும் அகரத்தைக் குறித்து
நின்றது. உயிர்க்குயிராதற் றன்மை குறிப்பு; இழைக்கும் எழுத்து என்ற கருத்துமிது;
ஒத்தி - ஒப்பாயிருக்கின்றாய்; இலையே ஒத்தி - உளையே ஒத்தி - காணக்
கிடையாமையால் இல்லாதவன் போலவும், கருதப் பெறவருதலின் உள்ளவன் போலவும்,
உள்ளாய்; இலை - இல்லாதவர்; உளை - உள்ளவர். பயிர்க்கோர் புயல் -
"பயிர்வளர்க்குந் துளியவன்காண் டுளியினின்ற நீரவன்காண்" (தேவா); "கார்பெறு கானம்
போல" (859); புயலேஎன்றது காக்கும் தன்மை குறித்தது; குழைக்கும் - குழையும்
என்பது எதுகை யின்பநோக்கிக் குழைக்கும் என்று பிறவினையாய் வந்தது; குழைதல் -
வாடுதல்; குடி - குடியிருக்கும் - வாழும் - இடம்; குடி - குடிமகன் - ஏவலாளன்;
அடியார்பாற் குழைந்து ஏவலும் செய்பவன் என்ற குறிப்புமாம்.