| | மழைக்கு நிகர் ஒப்பன - மழை - மேகம். நிகர் ஒப்பன - ஒரு பொருட் பன்மொழி; திரைகள் மழைக்கு நிகராதலாவது நீரினை மிகுதியாய் எடுத்து வீசுதல்; மேகங்களைப் போல அலைகளும் கடலின் நீரை மொண்டு தரையில் வீசுதலும் குறிப்பு; இவ்விருவகையும் குறிக்க, நிகர் - ஒப்பன - என்று உவமவுருபுகள் இரண்டு வைத்தருளினர் என்றலுமாம். வலித்து - வலியுடன் - விசையாக; வலம்புரி கொண்டு - அழைக்கும் - தன்னகத்துள்ள வலம்புரிச் சங்கங்களை முழக்கி அழைப்பது போல ஒலிக்கும் - (5) வீடின்....பயனென் - சிவனை வணங்காவிடில் வீடு - பிறப்பு - என்ற இவை என்ன பயன்றருவன; விடை.....நிற்க - "கடகரியும் பரிமாவும்" என்ற திருவாசகமும், (சாழல்), "மற்றேரும் பரிமாவு மதகளிறு மிவையொழியப், பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே" என்ற தேவாரமும் (பிள்ளையார்) காண்க. கூடும்.....என்னே - "மலைமகளை" என்ற (சாழல்) திருவாசகம் காண்க; பாடும் புலவர்க்கருளும் பொருள் என்? - நம்பிகள் தம்மையே குறித்துப் படர்க்கையில் வைத்துக் கூறிய குறிப்பு; நிதியம் பல செய்த - வாணிப முறையால் பலவும் உளவாக்கும்; கலச்செலவு - மரக்கலங்களின் செல்கை; 7-வது பாட்டும் பார்க்க - (6) இரவத்து - இரவில் - அத்து - சாரியை; ஏழனுருபு விரிக்க; பரவி.....என்னே - முன் பாட்டில் "பாடும்.....என்?" என்ற கருத்து; பண்டம் - நற்பொருள்;-(7) சொற்பொருள் - சொல்லுக் கெல்லாம் பொருளானவர்; நாக்கு.....நான் - பொறிகளுள் இருந்து உயிர் அவ்வவுணர்வுகளைப் பெற அருள்பவர்; நோக்கு....ஆர்க்கும் - 5-வது பாட்டில் "நிதியம் பல செய்த கலச் செலவு" என்ற கருத்து; ஏறநுந்தி - ஏற்றியும் நுந்தியும்; செலுத்தியும் வரவழைத்தும்;-(8) இத்திருப்பாட்டுப் பதிகத்தின் உட்கருத்துக் கூறி விண்ணப்பிக்கும் நிலை காண்க. (4258); மனைவாழ்க்கை - ஈண்டு இந்நிலவுலக வாழ்வு என்ற பொருள் தந்து நின்றது. "இவ்வுலகினிற் பாசம் அடுத்த வாழ்க்கை" (4258) என்று ஆசிரியர் இதற்குப் பொருள் விரித்தருளினர்; விட்டொழிந்தேன் - துறந்தேன். "பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று, நிலையாமை காணப் படும்" (குறள்); இங்குப் பற்று விட்டொழிந்த நிலையே கயிலையிற் சென்ற நிலை கூடுதல் காண்க - கண்டங் - கருத்தாய் என்று, "இற்று விழ இறுத்தாய்" என்றும் கூட்டுக; -(9) பிடிக்குக் களிறே - என்றது எடுத்துக்காட்டு; "பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகி" என்றதும், "காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன், கண்டே னவர்திருப் பாதம்" என்பன வாதியாக வருவனவும் கருதுக. உனைநான் மறவேன் - மறவாத நிலை - சிவயோக நிலை; மேல்வருஞ் சரிதக் குறிப்பு;-(10) எனக்கென்று மளிக்கும் - சரிதக் குறிப்பு; தடுமாற்று - பிறவி வாழ்க்கை; அடிகள் - தலைவர். | தலவிசேடம் :- 3893-ம் பாட்டின் கீழ் உரைக்கப்பட்டது காண்க; | குறிப்பு :- சென்ற 500 ஆண்டுகளின் மேலாய் இந்நாடு மலையாள மொழியின் கீழ்ப்பட்டுத் தமிழை மறந்தொழிந்தமையின் நம்பிகளது பெருமையினையும் சேரமானாரது பெருமையினையும் உளங்கொளாது மறந்தது. சிறப்பு வழிபாடுகளும், தேவார பாராயணம், சேரனாரது அருணூற் பாராயணம் குருபூசை முதலியவை ஒன்றும் நடைபெறவில்லை. சென்ற 18 ஆண்டுகளின் முன் 1935 (கொல்லம்-1110)-ல் அடியேனும் சில அன்பர்களும் பெருமுயற்சி செய்ததன் பலனாகத் திருவருள் கூட்டிய வகையால் ஆடிச் சுவாதித் (கற்கடகம்) திருநாள் சேக்கிழார் திருக்கூட்டத்தாராற் சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப் பெற்று வருகின்றது. அவ்வாண்டிலே இப்புராண உரை எழுத்துப் பணி தொடங்கியது. இவ்வாண்டு நிறை வெய்தும் நிலை அஞ்சையப்ப | | |
|
|