பக்கம் எண் :

பெரியபுராணம்605

 
     (இ-ள்) அங்கண்.....நின்றனர் - அவ்விடத்துச் சார்வாகிய திருவணுக்கன்றிரு
வாயிலில் விறலுள்ள சேரமான் பெருமானார் உள்ளே செல்லாமல் தடுக்கப்பட்டு
நின்றனர்; பொங்குமாமதம் பொழிந்த வெள்ளானையின் - பொங்கும் கரிய மதநீர்
பொழிந்த வெள்ளானையின் மேலே; தம்பிரானருளாலே - இறைவரது திருவருளினாலே;
உம்பர்.....காவலர் - தேவர்கள் சூழ்ந்து போற்றிட வந்த நந்தம் பெருமானாராகிய
திருநாவலூர்த் தலைவராகிய நம்பிகள்; அண்ணலார் திருமுன்பு நண்ணினார் -
இறைவரது திருமுன்பு சார்ந்தனர்.
 
     (வி-ரை) திருவணுக்கன் றிருவாயிலின்கண் சேரர் காவலர் தடையுண்டு நின்றனர்;
நாவலூர்க்காவலர் திருமுன்பு நண்ணினார்; இவ்விரண்டினுக்கும் காரணம் அண்ணலார்
திருவருளே
யாம் என்பார் அதனை இரண்டிற்கும் இடையில் வைத்தனர்.
     சேரர் காவலர் - நாவலூர்க் காவலர் - என்று இருவர்க்கும் ஒப்புக் கூறிய
நயமும் கண்டு கொள்க. அன்பினால் இருவரும் ஒப்பர்; அழையாமை வந்ததும், ஒருவர்
விண்ணப்பித்து அழைக்கப்பட்டு வந்ததும் இவர் தம்முள் வேறுபாடாம். (4273) பார்க்க.
 
     தடையுண்டு - கோயினாயகராகிய நந்திபெருமானாரால் உள்ளே செல்லாமல்
தடுக்கப்பட்டு.
 
     நாவலர் காவலர் நண்ணினார் திருமுன்பு - என்பதும் பாடம்.        41
 
4270.     சென்று கண்ணுத றிருமுன்பு தாழ்ந்துவீழ்ந்தெழுந்துசேணிடைவிட்ட
கன்று கோவினைக் கண்டணைந் ததுவெனக் காதலின் விரைந்தெய்தி
நின்று போற்றிய தனிப்பெருந் தொண்டரை நேரிழை வலப்பாகத்
தொன்று மேனிய "ரூரனே வந்தனை" யென்றென ருலகுய்ய.       42
 
     (இ-ள்) சென்று.....எழுந்து - உள்ளே சென்று இறைவரது திருமுன்பு வணங்கி
விழுந்து பின் எழுந்து, சேணிடை....எய்தி - நீண்டகாலம் நீளிடை விட்ட ஆன்கன்று
தனது தாய்ப்பசுவினைக் கண்டு ஆர்வமுற அணைவது போல விரைவாகச் சென்று
சேர்ந்து; நின்று.....தொண்டரை - நேர்நின்று துதித்த ஒப்பற்ற பெரிய
அத்திருத்தொண்டராகிய நம்பிகளைநோக்கி; நேரிழை...உலகுய்ய - உமையம்மையார்
பொருந்திய வலப்பாகத் திருமேனி யுடையாராகிய இறைவனார் "நம்பி ஆரூரனே!
உலகுய்ய வந்தனையோ?" என்று அருளிச் செய்தனர்.
 
     (வி-ரை) சேணிடை....அணைந்தது வென - ஆன் கன்றும் ஆவும் என்ற,
இவ்வுவமை பலவிடத்தும் பயின்று வருவதொன்று; ஆயின் இதனை ஆசிரியர் எடுத்துக்
கையாளும் முறைகள் மிகச்சிறப்புடையன. "ஈன்றவான் கனைப்புக் கேட்ட கன்று போல்"
(214); "கன்று தடையுண் டெதிரழைக்கக் கதறிக் கனைக்கும் புனிற்றாப் போல்" (3882)
என்ற இரண்டிடங்களிலும் இவ்வாறு நம்பிகளைக் கன்றாகவும் இறைவரை, அதனை
உடனின்று ஊட்டிக் காக்கும் தாயாகவும் உவமித்த நியமம் காண்க. "கன்றகல் புனிற்றாப்
போல்வர்" (761) என்றவிடத்து இறைவரைக் கன்றாகவும் கண்ணப்ப நாயனாரை
அதனைக் காக்கும் தாயாகவும் அவ்விடத் தமைதி பெற உவமித்த தகவும்
கண்டுகொள்க. அங்கங்கம் உரைத்தவையும் பார்க்க.
 
     நேரிழை வலப்பாகத் தொன்று மேனியர் - "பொருப்பரையன் மடப்பாவை
யிடப்பாலானை" முதலாகப் பயின்று வருவன ஐயன் சார்பு பற்றிக் கூறுவன. இங்கு
"நேரிழை ஒன்றும் வலப்பாக மேனியர்" என்றது அம்மையாரது சார்பின் மிகுதி