| அணைந்தான்!; என் தலைவன் அணைந்தான்!; என்று பலவாறும் ஓகை முரசம் சாற்றுவித்தார்; அமைச்சர்களைப் பயணம் புறப்பட ஏவினர்; யானை மேல் ஏறிக்கொண்டு புறப்பட்டுச் சென்று நம்பிகளை எதிர்கொண்டு வணங்கினர். அவருந் தொழுது கலந்தனர். இருவரும் அன்பு மீக்கூர இருமேனிகளும் ஒன்றாந் தன்மையிற்றழுவிக்கொண்டனர்; சேரனார் நம்பிகள்பாற் றிருவாரூர்ச் செல்வம் வினவி யின்புற்றனர். அதன்பின் நம்பிகளை யானையின் மேலேற்றிச் சேரனார், பின் ஏறியிருந்து அவருக்குக் குடை கவித்தனர்; சேனைகளும் அடியாரும் ஆர்ப்பெடுக்க வந்து நகர்வாயிலை யடைந்து அலங்கரிப்புகளுடன் ஆடல் பாடல் முதலியவற்றுடன் கூடிய நகரத்தின் ஊடே சென்று அரண்மனைவாயிலை அணைந்தனர். அங்கு யானையினின்றும் இருவரும் இறங்கி இருபுறமும் அந்தணர் வாழ்த்தக், கவரிகள் நிரைநிரை வீச மாளிகையின் நடுவுட் புகுந்தனர். அடல் விடையென நம்பிகளைச் சேரனார் தமது சிங்காசனத்தில் எழுந்தருளச் செய்து உரிமை நல்வினைகளாகிய பூசனை பலவும் செய்து பரிசனங்கள் மகிழ நிதிபல சிந்தினர். | இவ்வாறு சேரனார் மகிழ நம்பிகள் எழுந்தருளியிருந்த நாளில் அந்நாட்டில் உள்ள அரனார் பதிகள் பலவற்றையும் உடன்பணிந்தேத்தி மகோதையிற் புகுந்திருந்தருளினர். பின் ஒருநாள், சேரனார், திருமஞ்சனத் தொழில் தொடங்கிட, அவர் துணைவராகிய நம்பிகள் பண்டுதாம் இறைவரைப் பிரிந்து போந்த நன்னெறியின் எல்லை குறுகத் திருவஞ்சைக்களஞ் சார்ந்தனர். இறைவர் கோயிலினை வலங்கொண்டு திரு முன்பு வீழ்ந்து வணங்கினர்; அலைப்புது மனைவாழ்க்கை சரியத் தமிழ்மாலை தொடங்கி இவ்வுலகினிற் பாசம் அடுத்த வாழ்க்கையை யறுத்திட வேண்டும்'' மென்ற உட்குறிப்பினுடன் பாடியருளினர். இக்குறிப்புத் திருக்கயிலையில் அம்மையாருடன் கூட வீற்றிருந்த இறைவர் திருவுள்ளத்தில் ஏற்றுக்கொண்டருளி, அயன் முதலாகிய தேவர்களை நோக்கி “வெள்ளானையும் உடன்கொண்டு சென்று நம்மூரனை அதன் மேலேற்றிக் கொண்டிங்கு வாரும்” என்றருளிச் செய்தனர். அவ்வண்ணமே அவர்கள் திருவஞ்சைக் களத்தினை அணைந்து கோயிலை வலங்கொண்டு வணங்கித் திருவாயிலில் நெருங்கினர்; அப்போது திருப்பதிகம் முடித்து வழிபட்டுப் புறப்பட்ட நம்பிகள் திருவாயிலை அணைந்தனர்; தேவர்கள் அவரை வலம்வந்து வணங்கி இறைவரது அருளிப்பாட்டினை அறிவித்தனர். இறைவரது “ஏவல்” என்று கேட்ட பின் நம்பிகள் வேறு செயலின்றி அதனை எதிர் ஏற்க, அவரை வணங்கி வெள்ளானையின் மேலேற்றினர். ஐந்து துந்துபிகளும் முழங்கின; தேவர்கள் பூமழை பெய்தனர்; நம்பிகள் தமது தோழராகிய கழறிற்றறிவாரை மனத்தினுட் கொண்டு சார்ந்தனர். இவ்வாறு வேழம் நடந்தது. | இச் செயலைச் சேரனார் உணர்ந்து அப்போதே சாரநின்றதோர் குதிரையினை மேல்கொண்டு திருவஞ்சைக்களம் சார ஆகாயத்திற் செல்லும் தமது துணைவரைக் கண்டனர்; நிலத்தில் நிற்கலாற்றாதவராய் விதியாலே அப்பரியின் செவியினில் இட்டமாஞ் சிவமந்திரம் ஓதினர். அது விண்மேல் எழப்பாய்ந்து நம்பிகள் ஏறிச் சென்ற யானையினை அணுகி முறையாக வலங்கொண்டு அதன் முன்பு சென்றது; சேரனாருடன் சென்ற படைவீரர் தமது கண்ணுக்குப் புலப்படு மெல்லைவரைத் தமது தலைவரைக் கண்டுகொண்டிருந்து, பின் காணாமையால், அன்பினால் பிரிவாற்றாத வராய்த் தத்தம் சுரிகையை உருவி முறை முறை உடல் வீழ்த்து வீரயாக்கையினைக் ******************************************************************************up to this page copied print copies********************************************************************** கொண்டெழுந்து சேரனாரைச் சார முன் சென்று சேவகம் ஏற்று உடன் சென்றனர். | | |
|
|