பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்107


மிகப் பழமையான திருவாத்திவிருக்ஷம் ஒன்று, எழுந்தருள் நாயகர் திருமுன்பு இருக்கின்றது. பிராகாரத்தின் கீழ்ப்பக்கத்தில் இத்தலத்து வாழ்ந்த சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளன், சந்தன நங்கை இவர்கள் திருவுருவங்கள் இருக்கின்றன. சிறுத்தொண்டர், உத்தராபதியினின்றும் வந்த பைரவ வேடம் தாங்கிய பரமனுக்குத் தம்மகன் சீராளனையே கறிசமைத்திட்டு முத்தியடைந்தனர் என்பது வரலாறு. இந்த அடியார் பெருமகனார், திருஞானசம்பந்தப் பெருமானும், அப்ப மூர்த்திகளும் எழுந்தருளியகாலத்து அவர்கள் நட்பைப்பெற்று அவர்கள் பதிகத்துச் சிறப்பிக்கப்பெறும் தகுதியைப்பெற்றவர். சித்திரைப் பூர்ணிமையில் சிறுத்தொண்டர் திருவமுதுபடைத்த திருவிழா நடைபெறும். அமுதுபடையல் என்றே அது வழங்குகிறது.

இறைவன் - கணபதீச்சர்த்தார். இறைவி - திருக்குழல் நன்மாது. விருட்சம் - திருவாத்தி. தீர்த்தம் - சூர்யதீர்த்தம். பைரவ கோலத்துடன் உத்திராபதியார் எழுந்தருளியிருக்கிறார்.

கல்வெட்டு:

முதலாம் இராஜராஜன் முதலாக ஏழு சோழ அரசர் காலத்தனவும், பராக்கிரம பாண்டியன் காலத்ததும், வீரவிருப்பண்ண உடையார் முதலிய இரு விஜயநகர அரசர்கள் காலத்தனவும் ஆகிய கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றால் அறியப் பெறும் சில உண்மைகள்: இத்தலம் கயாமாணிக்க வளநாட்டு மருகல்நாட்டுத் திருச்செங்காட்டங்குடி என வழங்கப் பெறுகின்றது. முதல் இராஜராஜன் காலத்திய கல்வெட்டு1 மும்முடிச்சோழ வளநாட்டு மருகல்நாட்டுத் திருச்செங்காட்டங்குடி எனக் காட்டுகிறது.

இறைவன் கணபதீச்சரமுடைய நாயனார்2 கணபதீச்சரமுடைய நாயர் எனவும், பைரவமூர்த்தி உத்திராபதி நாயகர் எனவும், சீராளர் சீராள தேவர் எனவும், சிறுத்தொண்டர் ‘சிறுத்தொண்ட நம்பி’ எனவும்,3 விநாயகப்பெருமான் வாதாபி கணபதி4 எனவும் குறிக்கப் பெறுகின்றனர்.

சித்திரைமாதத் திருவாதிரையில் சீராளதேவர்க்குத் திருவிழா நடந்ததாக முதல் இராஜராஜன் காலத்துக் கல்வெட்டுக்5 கூறுகிறது. மூன்றாங் குலோத்துங்கன் காலத்தில் சிறுத்தொண்டர் மடத்திலிருந்து

___________________________

1-57 of 1913 , 2-51 of 1913 , 3-71 of 1913, 4-72 of 1913, 5-57 of 1913.