சீராளப்பிள்ளையை
எழுந்தருள்வித்த செய்தி தெரிகிறது1. உத்தராபதி நாயனாருக்குச்
சித்திரா பௌர்ணிமையில் விழா நடந்தமையை மூன்றாம்
இராஜராஜன் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. ஒவ்வொரு
மாதமும் பரணி விசேடமாகக் கொண்டாடப் பெற்றமை
மற்றொரு கல்வெட்டுக் காட்டும்2. இந்த விழாவிற்கு
விடப்பட்ட நிலம் ‘திருவோட்டுக் கட்டளை’ என
வழங்கப்பெற்றமை அறிந்து இன்புறுக. சித்திரை, ஐப்பசிப்
பரணிகள் மிக விசேஷமானவை; ஆதலால் இவ்விழாவைக்
கொண்டாட, கி.பி.1245-67-இல் வாழ்ந்த மூன்றாம் இராஜேந்திரன்
நிலம்விட்டான்3. மூன்றாம் இராஜராஜன் ஆட்சி
24-ஆம் ஆண்டில் அரசகாரியம் பார்ப்பவனான அரசூர்
உடையார் திருச்சிற்றம்பலம் உடையானான திருச்சிற்றம்பலம்
உடைய பல்லவராயன்; உத்திராபதியார் சித்திரா பௌர்ணிமை
விழாவிற்கு எழுந்தருளும்போது திருமுத்துவிதான நெறியில்
உணவளிக்க ஏற்பாடு செய்தமை ஒரு கல்வெட்டால் அறியப்படும்4.
மற்றும் சீராளதேவர் விழாவிற்கு வேளாளன் உலகஞ்
சிறியவனான தாப்பிள்ளை மூவேந்த வேளாளனும்5.
விழாவிற்கு வரும் அடியார்களுக்கு அமுதுபடிக்காகத்தாயன்
சிற்றம்பல முடையானும் 6 நிவந்தம் அளித்தார்கள்.
விளக்கிற்கும், நிவேதனத்திற்குமாக மற்றும் பலர்
வழங்கியிருக்கின்றனர்.
8. திருவாலவாய் (மதுரை)
தலம்:
பாண்டிநாட்டின்
தலைநகர் தமிழகத்தின் அனைத்துப்
பெருநகர்களிலிருந்தும் இரயில், பேருந்துகளில் செல்லலாம்.
இத்தலத்திற்கு
மதுரை, நான்மாடக்கூடல், திருவாலவாய், கடம்பவனம்,
துவாதசாந்தபுரம், பூலோக கயிலாயம், சிவராஜதானி,
கன்னிபுரீசம், ஜீவன்முத்திபுரம், சிவநகரம் எனப்
பல பெயர்கள் தலபுராண நூல்களிற் கூறப்பெற்றுள்ளன.
இது பாண்டிய நாட்டின் தலைநகரம். கடைச்சங்கமிருந்து
தமிழாராய்ந்த தலைநகர். சொக்கலிங்கப்பெருமான்
64 திருவிளையாடல்களை இயற்றிய தனி நகரம். மூர்த்தி
நாயனார் விபூதி உருத்திராக்கம் சடைமுடி என்ற மூன்றனையும்
துணைக்கொண்டு மும்மையா லுலகாண்ட தலைநகரம். சைவங்காத்த
திருஞானச் செம்மலும், மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும்,
நெடுமாறநாயனாரும் எழுந்தருளிய இடம். இந்திரன்,
வருணன்,
______________
1-66 of 1913 2-71 of 1913, 3-77
of 1913, 4-69 of 1913, 5-56 of 1913, 6-58 of 1913.
|