பக்கம் எண் :

110தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


சொக்கலிங்கப் பெருமானுக்கு அட்டாலைச் சேவகன், அடியார்க்கு நல்லான், அதிரவீசி ஆடுவான், அபிடேகச் சொக்கன், பண்ணிசைச் சொக்கன் முதலான பலபேர்கள் வழங்குகின்றன. அம்மைக்கு அபிஷேகவல்லி, அங்கயற்கண்ணி, தமிழ் அறியும் பெருமாட்டி முதலிய பல நாமங்கள் உள்ளன.

கல்வெட்டு:

மதுரை தொன்றுதொட்டே வரலாறுடைய தலம். கி.மு. 302-இல் பாடலிபுரத்தில் அரசாண்ட சந்திரகுப்தன் அவையில் செலுக்கஸின் தூதனாகவந்த மெகஸ்தனிஸ் பாண்டியநாட்டையும் மதுரையையும் குறிப்பிடுகிறார். கி.பி.140-இல் தாலமியும் குறிப்பிடுகிறார். சங்க இலக்கியங்கள் மதுரையின் இயற்கை வளத்தை எடுத்து இயம்புகின்றன. உலகப் பொதுநூலாகிய திருக்குறள் அரங்கேறிய இடமும் இதுவே. முதலாம் நெடுஞ்செழியன் முதல் பல பாண்டிய மன்னர்களினுடைய நிகழ்ச்சிகள் குறிக்கப்பெறுகின்றன.

இத்தலத்தைப்பற்றிய கல்வெட்டுக்களாக சுந்தரேஸ்வர ஸ்வாமி கோயிலிலும், மதனகோபால சுவாமி கோயிலிலும், கூடலழகர் கோயிலிலுமாக முப்பத்தைந்து கல்வெட்டுக்கள் உள்ளன. 17-இல் தாம்பிர சாஸனங்கள் உள்ளன. அவற்றுள் 36 of 1908 கல்வெட்டு பெருமாள் கோயிலில் உள்ளது. 557 முதல் மூன்று கல்வெட்டுக்கள் கூடலழகர் கோயிலைப்பற்றியன. செப்புப் பட்டயங்களில் 6, அந்தணர்களுக்கும் பூந்தோட்டத்துக்குமாக கிருஷ்ணப்பநாயக்கர் ராணி ரங்கம்மாள் இவர்கள் நிலம் அளித்தமையை அறிவிக்கின்றன. 6 செப்புப் பட்டயங்கள் சேது மன்னர்கள் செய்த அறச்செயல்களை அறிவிப்பன. ஏனையன சுந்தரேஸ்வரர் கோயிலுக்கும் மீனாட்சியம்மை கோயிலுக்கும் செய்த பல பணிகளை அறிவிக்கின்றன. ஜடாவர்மன் குலசேகர பாண்டியன், மாறவர்மன் சுந்தரபாண்டியன், பராக்கிரம பாண்டியன், வீரபாண்டியன், ஸ்ரீ வல்லபன் முதலிய பாண்டிய மன்னர்கள் திருக்கோயிலுக்கு நிலம் அளித்ததையும் வரி தள்ளுபடி செய்ததையும், வரி வசூலித்துக் கொள்ள உரிமை அளித்ததையும் அறிவிக்கின்றன. 507 of 1907 கல்வெட்டில் ஸ்ரீ வல்லபதேவன் காலத்தில் சோமசுந்தரப் பெருமாளுக்கு இருசந்தியிலும் ஏற்பித்தருள நந்தவனம் அமைத்த செய்தி அறிவிக்கப்படுகின்றது. இவள் ஏழுலகம் முழுவதுடையாள் எனவும் வழங்கப்படுகிறாள். கி.பி.1572 முதல் 1595 வரை அரசாண்ட வீரப்ப நாயக்கர் கம்பத்தடி மண்டபத்தைக்கட்டினார் (35 of 1908). ஒரு செப்புப் பட்டயம் ஞானக்கூத்தரான சத்தியஞான