பக்கம் எண் :

118தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


12. திருமுதுகுன்றம்

நடுநாட்டுத் தலங்களில் 9 ஆவது தலம். விருத்தாசலம் என வழங்கப்படுகின்றது. சிதம்பரம், சேலம் முதலிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. கடலூர் - சேலம் இருப்புப் பாதையில் இரயில் நிலையம் உள்ளது.

சுவாமிபெயர் முதுகுன்றநாதர்; பழமலைநாதர். அம்மைபெயர் பெரியநாயகி.

தீர்த்தங்கள்:

நித்யானந்தகூபம், அக்கினிதீர்த்தம், சக்கரதீர்த்தம், குபேரதீர்த்தம் என்பன. மணிமுத்தாறு சிறப்புடையது.

தலவிருட்சம்:

வன்னிமரம். கோயிலின் வடக்குக் கோபுரத்திற்கு நேர்வடக்கேயுள்ள மணிமுத்தாற்றுப் பகுதிக்குப் புண்ணியமடு என்று பெயர். இங்கேதான் இறந்தவர்களின் எலும்புகளை இட்டு முழுகுவது வழக்கம். இங்கே ஆழத்துப் பிள்ளையார் என்பது தலவிநாயகர் திருப்பெயர். முதல் பிராகாரத்திற்குக் கைலாசப் பிராகாரம் என்று பெயர். இந்தப் பிராகாரத்தில் வடமேற்குமூலையில் இருபத்தெட்டு ஆகமக்கோயில் உள்ளது. அம்மை திருமுக மண்டலம் கிழக்குநோக்கியது. அம்மையின் திருநாமம் வடமொழியில் விருத்தாம்பிகை. சுவாமி பெயர் விருத்தகிரீசர். கற்பக மரமே வன்னிமரமாக வந்து பழமலைநாதர் திருக்கோயில் திருப்பணியைச் செய்ததாக வரலாறு. உற்சவமூர்த்திநாமம் பெரியநாயகர். இவர் ஆண்டிற்கு ஒரு முறை மாசிமக விழாவில் ஆறாந் திருநாள் மட்டுமே எழுந்தருளிக் காட்சி வழங்குவார். பிரமன் படைப்புக்குமுன் சிவபெருமான் தாமே மலைவடிவாகி நிற்கப் பிரமன் அதனையறியாது, பல மலைகளையும் படைத்து, அவற்றை நிலைபெறுத்த இடமின்றி மயங்கச் சிவபெருமான் தோன்றியருளி தானே பழமலையாதலைத் தெளிவித்தார். ஆதலின் முதுகுன்றம் எனவும், பழமலை எனவும் வழங்குவதாயிற்று.

வழிபட்டவர்கள்:

சுக்கிராசாரியார், யாக்ஞவல்க்கிய முனிவர், சிகண்டி, கோசிகன், விதர்க்கணசெட்டி, விபசித்து முனிவர், அகத்தியர், சுவேத