பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்119


மன்னர், நாதசர்மா, அநவர்த்தினி முதலியோர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பதிகம்பாடிப் பன்னீராயிரம் பொன் பெற்று அதனை மணிமுத்தாற்றிலிட்டுத் திருவாரூரில் பெற்ற அற்புதம் நிகழ்ந்த இடம். இத்தலத்தில் விழா நிகழ ஏற்பாடுகள் செய்தவர் கச்சிராயமன்னர். துறவுபூண்டு உண்மை ஞானியான கன்னடநாட்டு மன்னர் ஒருவர்க்காக இறைவனே தண்ணீர்ப் பந்தல் வைத்துக்காத்ததாகவும், அம்மை அவருக்குப் பாலளித்துக் குமாரதேவர் எனத் திருநாமம்சூட்டி அழைத்ததாகவும், குமார தேவர்க்காக அம்மை பாலாம்பிகையாகி அமுது படைத்ததாகவும் வரலாறு. கி.பி.11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த இலிங்காரெட்டியாரும், அவர் மகன் அண்ணாமலைரெட்டியாரும் திருப்பணி செய்து கி.பி. 1623 இல் கும்பாபிஷேகம் செய்தனர். அண்மையில் 1994 இல் மகா கும்பாபிஷேகம் நிகழ்த்தப் பெற்றுள்ளது.

கல்வெட்டு:

இராஜகேசரிவர்மனான குலோத்துங்கசோழன் காலத்தில் இத்தலம் விருதராஜபயங்கர வளநாட்டு மேற்காநாட்டு இருங்கோளப் பாடியின் ஒருபகுதியான மருவூர்க்கூற்றத்துத் திருமுதுகுன்றம் எனக்குறிக்கப்பெற்றுள்ளது. சுவாமிபெயர் முதுகுன்றுடைய நாயனார் எனவும், திருமுதுகுன்றத்துடையார் எனவும் வழங்கப்பெறுகின்றது. கோப்பெருஞ்சிங்கன் சுவாமிக்கு ஒரு மாங்காய்மாலையும், விளக்குக்குப் பொன்னும், ஆடுகளும், பசுக்களும் அளித்தான்1. இராஜராஜன், பரகேசரிவர்மன், குலோத்துங்கன் இவர்களும் பசுக்களையும், பொன்னையும், நிலத்தையும் அளித்தனர்.

இராஜகேசரிவர்மனான குலோத்துங்கனது காலத்து, ஆளப்பிறந்தான் ஏழிசைமோகனான குலோத்துங்கசோழ காடவராதித்தன் இறைவற்கு ஸ்நபனமண்டபம் கட்டினான்.2 புக்கண உடையார், ரங்கப்ப நாயகர், செவ்வப்பநாயகன் இவர்கள் காலத்திய நிபந்தங்களும் மிகுதியாக உள்ளன. சகம் 1545இல் கச்சிராயன் என்பவன் குகைகாவலனுக்கு நான்கு கலம் நெல் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தான். ரங்கப்பமாவைராயர் என்பவர் அரியலூர் சந்தைப்பேட்டையில் மூட்டை ஒன்றுக்கு அல்லது ஆள்தூக்கக்கூடிய கைமூட்டை இரண்டுக்கு ஒருகாசு விழுக்காடு வரிவாங்கிக்கொள்ள உரிமை வழங்கியிருக்கிறார். கி.பி.16 ஆம் நூற்றாண்டினனான ெ்சவ்வப்பநாயகன் நான்கு இராசகோபுரங்களையும் கட்டியதாகச் சொல்வர். கி.பி. 1602 இல்

_____________________

1-134, 135 of 1902, 2-137 of 1900