முத்துக்கிருஷ்ணப்பராயர்
என்பவர் திருமுதுகுன்றமுடையார்க்குப் பஞ்சாவரணப்
பிராகாரம் கட்டிவைத்ததாகத் தெரிகின்றது. அப்பிராகாரம்,
புறமதிலுக்கு வெளியிலிருந்து முகமதியர் கலகத்தில்
இடிந்துபோனதாகக் கூறுவர். தென்னாற்காடு மாவட்ட
ஆட்சியராக இருந்த ஹைட்துரை கைலாசப்பிராகாரத்திற்குத்
தளவரிசை போட்டதால் இன்றும் அது ஹைட் தளவரிசையென
வழங்குகின்றது.
13. வியலூர்
இத்தலம் பண்டாரவாடை
திருவியநல்லூர் என்று வழங்கப்பெறுகிறது. வியலூர்
என்ற பெயரோடு தஞ்சை மாவட்டத்தில் வேறு இரண்டு
ஊர்களும் உள்ளன. சோழநாட்டுக் காவிரிவடகரைத்
தலம். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து வேப்பத்தூர்
வழியாகப் பேருந்து வசதி உள்ளது. சுவாமிபெயர்
யோகானந்தீசுவரர். அம்மைபெயர் சாந்தநாயகி.
தீர்த்தம் சடாயுதீர்த்தம். இறைவன்
புராதனேசுவரர், வில்வாரண்யேசுவரர் எனவும் பெயர்
பெறுவர். அம்மை சௌந்தரநாயகி எனவும் வழங்கப்பெறுவர்.
ஜடாயு வழிபட்டுப் பேரின்பம் எய்திய தலம்.
கல்வெட்டு:
அரசியலார் படியெடுத்த
கல்வெட்டுக்கள் மொத்தம் 94 உள்ளன. இத்தலம்
கி.பி. 985-1013 இல் அரசாண்ட முதல் இராஜகேசரிவர்மன்
காலத்து அவனிநாராயண சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்ததென்றும்,
1011-1043ல் அரசாண்ட இராஜேந்திர சோழதேவன் காலத்து
வடகரை இராஜேந்திர சிம்மவளநாட்டு மண்ணி நாட்டுப்
பிரம்மதேயமான வேப்பத்தூர் சோழமார்த்தாண்ட
சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்தது என்றும் தெரிகிறது.
சுவாமிபெயர் சிவயோகநாதர் எனவும்1, உமாமகேசருக்கு
ஆண்டநாயகர் எனவும்2, கல்வெட்டுகள் பெயர் கூறுகின்றன.
இத்தலத்துக் கல்வெட்டுகளால் குறிக்கப்பெறுகின்ற
சோழமன்னர்கள் பன்னிருவர். பாண்டியர் ஒருவர். விஜயநகர
கிருஷ்ணதேவராயர் ஒருவர். இவர்களில் கி.பி. 862 முதல்
894 வரை ஆண்ட பாண்டிய மன்னனாகிய வரகுண பாண்டியனது
38-ம் ஆண்டின் நிகழ்ச்சி ஒன்று குறிக்கப்பெறுவதால்
இக்கோயில் அதற்குமுன்பே கற்றிருப்பணியாகச் செய்யப்பெற்றமை
தெளிவு3. பராந்தகன் I கி.பி. 907 முதல் 947 வரை ஆட்சி
நடத்தியவன். இவனுடைய ஆட்சி கி.பி.16 ஆம் ஆண்டில்
விளக்கீட்டிற்காக ஆடுகள்
_______________________
1-338 of 1907. 2-364 of 1907,
3-17 of 1907.
|